ஆமை வடிவக் கைக்கோடரி

கற்கோடரி வகைகளுள் ஒன்றான ஆமை வடிவக் கைக்கோடரி, பிரான்ஸ் நாட்டில் உள்ள மிக்கா குயின் (Micoquian) என்னும் இடத்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப் பட்டது. இவ்வகை கற்கருவிகள் தமிழ்நாட்டில் கொற்றலை ஆற்றுப் பகுதிகளில் காணப்படுகின்றன.[1] இதனை கள ஆய்வின்போது, தமிழக தொல்லியல் துறையச் சேர்ந்த து. துளசிராமன் என்பவர் அத்திரம்பாக்கத்தில் கண்டறிந்தார். இத்தகைய கைக்கோடரிகள் பழங்கற்காலக் கருவிகளாகும்.[2] தோற்றத்தின் அடிப்படையில் இவ்வகை கற்கருவி தமிழில் ஆமை வடிவக் கைக்கோடரி என்றே அழைக்கப்படுகிறது. தற்போதைய மண்வெட்டியைப் போன்று மரப்பிடியை நுழைப்பதற்கு ஏற்ற நீண்ட நாக்குப் பகுதியும், நிலத்தை தோண்டுவதற்கு ஏற்றவகையில் தட்டையான பகுதியும் இக்கருவியில் காணப்படுகின்றன.

ஆமை வடிவக் கைகோடரி

மேற்கோள்கள் தொகு

  1. து. துளசிராமன், தமிழக தொல்பழங்காலமும் பூண்டி அகழ்வைப்பகமும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை, 2005, ப.45
  2. http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/kaikkotari.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆமை_வடிவக்_கைக்கோடரி&oldid=2954125" இலிருந்து மீள்விக்கப்பட்டது