ஆம்பல் (எண்)

ஆம்பல் (எண்) என்பது அளவு காட்டாமல் மிகுதியைக் குறிப்பிடும் எண்ணுப்பெயர்களுள் ஒன்றாகும். இதனை அல்பெயர் எண் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[1] பதினைந்து இலக்கம் கொண்ட பேரெண் சங்கத்தமிழர்களால் ஆம்பல் என அழைக்கப்பட்டது. அதாவது நூறு திரிலியனை ஆம்பல் என அழைத்தனர்.[2] (ஆம்பல் = 100,000,000,000,000 = 1014 = நூறு திரில்லியன்)

சேரலாதன் ஈழத்தின் மாந்தை நகரில் இருந்த அவனது அரண்மனை முற்றத்தில் ஆம்பல் மதிப்பிலான (நூறு திரிலியன்) பொருளை நிலம் தின்னக்(அழிந்து போகுமாறு) கைவிட்டான் என்பதை மாமூலனார் என்ற புலவர் அகநானூற்றில் குறிப்பிடுகிறார்.

பதிற்றுப்பத்து என்ற இலக்கியம் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற மன்னனைக் கபிலர் வாழ்த்துவதாக

" இலைகளால் சூழப்படாத பூக்கள் அல்லாத பல ஆம்பல் என்னும் பேரெண்ணும, அதனை ஆயிரத்தால் பெருக்கிய வெள்ளம் என்னும் பேரெண்ணும் சேர்ந்த எண்ணிக்கை கொண்ட பல ஊழிக்காலம் நீ வாழ்வாயாக!"எனக் குறிப்பிடுகிறது.[5]

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. தொல்காப்பியம், பொருளதிகாரம், 19
  2. தமிழரசி (25 மே 2012). "ஆம்பல்". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 14, 2012.
  3. அகநானூறு: 127: 3-10
  4. பதிற்றுப்பத்து பாடல், ஏழாம்பத்து, பாடல் 63
  5. "அருவி ஆம்பல்". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 14, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பல்_(எண்)&oldid=3539971" இலிருந்து மீள்விக்கப்பட்டது