ஆம்பியர் நீச்சல் விதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நேரான மின்கடத்தியில் மின்சாரம் பாயும் போது, கடத்தியினை அடுத்து ஒரு காந்தப் புலம் தோன்றுகிறது. கிடைமட்டத்தில் எளிதில் சுழலுமாறுள்ள ஒரு காந்த முள்ளின் பக்கத்தில் மின்சாரம் பாயும் கடத்தியை கொண்டுவந்தால் காந்தமுள் விலக்கமுறும் திசையினை ஆம்பியர் நீச்சல் விதியுடன் தெரிந்து கொள்ளலாம்.
ஆம்பியரின் நீச்சல் விதி:
காந்த முள்ளினைப் பார்த்து நீந்திக் கொண்டு இருக்கும் ஒருவனின் திசையில் மின்னோட்டம் பாய்வதாகக் கொண்டால் அவனது இடக்கை பக்கம் காந்த முள்ளின் வடமுனைத் திரும்பும்.