ஆம்லா ரூயா
ஆம்லா ரூயா (Amla Ruia) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவகி ஆவார்.
ஆம்லா ரூயா Amla Ruia | |
---|---|
தேசியம் | இந்தியன் |
பணி | இந்திய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் |
அறியப்படுவது | சமூக சேவகி |
சொந்த வாழ்க்கை
தொகுஆம்லா ரூயா உத்திர பிரதேசத்தில் பிறந்தார்.[1] தற்போது அவர் மும்பை மகாராஷ்டிராவில் உள்ள மலபார் ஹில் எனுமிடத்தில் வசித்து வருகிறார். இவருடைய கணவர் ராஜஸ்தானை சேர்ந்தவர்.[2] இவர் கவிஞரும், பாடலாசிரியரும், கலைஞரும், ஆன்மீக ஆசிரியருமாவார்.[3]
சேவை
தொகுஇவர் நீர் ஆதாரங்களை ஏற்படுத்தியதன் மூலம் அறியப்படுகிறார்.[4].தன்னுடைய மாநிலத்தில் நிலவிய தண்ணீர் பஞ்சத்தை மாற்றியமைக்க வேண்டுமென்று ஆகர் தொண்டு நிறுவனத்தை நிறுவினார்.இதன் மூலம் பல கிராமங்களில் நீர் தேக்கங்களையும் அணைகளையும் ஏற்படுத்தியுள்ளனர்.
ஆகர் தொண்டு நிறுவனம்
தொகுஅறக்கட்டளையின் முக்கிய நோக்கம் நீர், தாவரங்கள் மற்றும் மண் போன்ற இயற்கை ஆதாரங்களின் பாதுகாப்பினை ஏற்படுத்துதல் ஆகும்.நீர் என்பது மக்களின் சமூக அங்கீகாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இங்குள்ள மக்கள் உணர்த்தியுள்ளனர்.[3].
சாதனைகள்
தொகுதற்போது நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 216-க்கும் மேலான நீர்த்தேக்கங்களை ஏற்படுத்தி உள்ளனர்.[2].இதனால் 117 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயனடைகின்றனர்.[3].
விருதுகள்
தொகு2011 ஆம் ஆண்டில், இவருக்கு சமூக சேவை மற்றும் சமூக மேம்பாட்டின் வகைக்கான லக்ஷ்மிபத் சிங்கானியா - ஐஐஎம், லக்னோ தேசிய தலைமை விருது வழங்கப்பட்டது.[4][5].இங்கு உள்ள மக்கள் இவரைதண்ணீரின் அன்னை என்று அழைக்கின்றனர்.[2].[3].
சான்றுகள்
தொகு- ↑ "About the Trust". Aakar Charitable Trust. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-18.
- ↑ 2.0 2.1 2.2 http://www.vikatan.com/avalvikatan/2016-may-03/inspiring-stories/118268-amla-ruia-rajasthans-mother-of-water.html
- ↑ 3.0 3.1 3.2 3.3 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-05-27.
- ↑ 4.0 4.1 "Leadership Awards". Hindustan times இம் மூலத்தில் இருந்து 18 ஜனவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150118202726/http://www.hindustantimes.com/business-news/premji-nayar-win-biz-awards/article1-966634.aspx.
- ↑ "LAKSHMIPAT SINGHANIA - IIM, LUCKNOW NATIONAL LEADERSHIP AWARDS - 2013". www.lpsiimlawards.in. Archived from the original on 2019-01-09. பார்க்கப்பட்ட நாள் 2015-09-18.