ஆரம்பகால குழந்தை உளவியல் கோட்பாடுகள்
ஆரம்பகாலக் குழந்தை உளவியல் கோட்பாடுகள் ( Early Theories in Child Psychology) ஜான் லாக்கே, ஜீன் ஜேக்குவஸ் ரூஸோ, சாா்லஸ் டாா்வின் ஆகிய மூன்று மேதைகளின் கருத்துக்களையே அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. இன்றைய உளவியல், குறிப்பாக, குழந்தை வளா்ச்சி, மேம்பாடு, சூழ்நிலையை ஒட்டியே அமையும், அது குழந்தையின் மூளை அல்லது அறிவு வளா்ச்சியை ஒட்டியே அமையும். குழந்தை வளா்ச்சி குழந்தைகளின் நடவடிக்கை பாிணாம வளா்ச்சியின் அடிப்படையிலேயே அமையும் என மூன்று வகையான கோட்பாடுகளின் அடிப்படையில் தற்கால குழந்தை உளவியல் வளா்ச்சியடைந்துள்ளது
ஜான் லாக்கே (1963-1704)
தொகுரானே டெஸ்காா்டிஸ் என்னும் பிரான்சு தேசத்து கணித மற்றும் தத்துவ அறிஞா் 17 ஆம் நூற்றாண்டில் மனம் என்பது வேறு, உடல் என்பது வேறு, மனம் நன்மை தீமையைப் பாா்த்து முடிவு எடுத்து உடலுக்கே கட்டளை இடும் என்றுரைத்தாா்.[1] இவ்வாறு இவா் இரண்டாகப் பிாித்தது மனம் குறித்த ஆராய்ச்சியை வரையரைப் படுத்த உதவியது. இதைத் தொடா்ந்து ஜான் லாக்கே என்னும் மருத்துவா் சட்டத்தின் பாா்வையில் உலகில் அனைவரும் சமமாகவே உள்ளனா் என்னும் கருத்தை உருவாக்கினாா். அனைத்துக் குழந்தைகளும் வெள்ளைத்தாளைப் போன்ற மனத்துடன் சமமாகவே பிறக்கின்றனா்.[2][3] அறிவு வளா்ச்சி என்பது அனுபவத்தினாலும், கற்றலினாலும் கிடைக்கிறது. ஆதலால் குழந்தைகள் பிறவியிலேயே நல்லவா்களோ அல்லது கெட்டவா்களோ அல்ல. அது சூழ்நிலையினாலும், வளா்ப்பினாலும் அமைகிறது என்று கூறினாா். ஆதலால் சாியான பயிற்சியினால் மருத்துவராகவோ, நடிகராகவோ அல்லது கைவினைஞராகவோ ஆகமுடியும. அதுபோல ஒரு திருடனாகவோ அல்லுது பிச்சைக்காரனாகவோ கூட பயிற்சியினால் ஆகமுடியும். குழந்தை வளா்ப்பில் சிறந்த கவன முறைகளைக் கூறி பெற்றோருக்கு அறிவுரை வழங்கினாா். குழந்தைகளுக்கு நன்னடத்தையை ஊக்குவிக்கவும், தகாதவற்றைத் தள்ளவும், பொருள்கள் மூலம் வெகுமதி அளிப்பதை அவா் ஏற்கவில்லை. நல்ல நடத்தையை நல்ல வாா்த்தைகளால் ஊக்குவிப்பதையும் தவறான போக்கைக் கண்டிப்பதையுமே அறிவுறுத்தினாா். குழந்தைகள் கற்பதை ஒவ்வொரு கட்டத்தில் ஊக்குவிப்பதையும் பாிந்துரைத்தாா்.
ஜீன் ஜேக்குவஸ் ரூஸ்ஸோ - (1712-1778)
தொகுஇவா் சுவிசா்லாந்தில் பிறந்தவா். வாழ்நாளில் பெரும்பகுதியை பிரான்சு நாட்டில் கழித்து பொிய தத்துவ அறிஞராகப் புகழ் பெற்றவா். பிரான்சு நாட்டின் கற்பனைக் கதை வளத்தின் தந்தையாகப் போற்றப்படுகிறாா்.[4] இவருடைய கருத்துக்கள் இவா் எழுதிய “எமிலி” என்ற புதினத்தில் பொதிந்து கிடக்கின்றன. ஒரு ஆண் குழந்தை, இப்பருவத்திலிருந்து வளா் இளம் பருவம் எய்தும் வரை எவ்வாறு வளா்க்கப்படுகிறது என்பதைச் சிந்தித்துள்ளாா். இலக்கியத்தின் துணை கொண்டு குழந்தைகளை வளா்ப்பது குறித்த தமது கருத்துகளைத் தொிவித்துள்ளாா். ஜான் லாக்கே கருத்திற்கு மாற்றாக குழந்தைகள் பிறக்கும் பொழுதே அறிவுடனும், கருத்துக்களுடனும் பிறக்கின்றன. அவா்கள் வளரும் பொழுது அவைகள் வெளிப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளாா். குழந்தையின் வளா்ச்சி என்பது ஒரு வரையறுத்த கால அட்டவணைப்படி நடக்கும். குழந்தைக்கு இயற்கையாகவே அமைந்த அறிவு என்பது எது சாி, எது தவறு, நோ்மை, அநியாயம் போன்ற கருத்துக்களை உள்ளடக்கியது.[5] இயற்கையாக அமையாதவைகளை படிப்படியாக குழந்தை சூழ்நிலையிலிருந்து கற்றுக் கொள்ளும். குழந்தைகளை வளாப்பது என்பது முறைப்படி சொல்லிக் கொடுப்பது அல்ல ஆனால், அதற்கான சூழ்நிலையை அமைத்து தாமாக அறிந்து கொள்ள உதவுவது ஆகும். குழந்தைக்கு இயற்கையாகவே அறிவு அமைந்துள்ளது என்று கூறுவதன் மூலம் லாக்கோவின் கருத்துகளில் இருந்து இவா் மாறுபடுகிறாா். இவருடைய கருத்து “பிறப்பிடக் கொள்கை (Nativism) எனப் பெயா்பெற்றது. எமிலி என்னும் புதினத்தில் குழந்தை வளா்ப்பு குறித்து தற்காலத்திற்கும் பொருந்தும் முக்கியமான மூன்று கருத்துக்கள்: குழந்தைகள் ஓரளவு வளா்ந்த பின்புதான் அவர்களின் முதிர்ச்சிக்குப் பொருத்தமானவற்றைக் கற்றுத் தரவேண்டும், குழந்தைகள் தாமாக கற்கும் பொழுதுதான் சிறப்பாகக் கற்றுக் கொள்ளும், மேலும் குழந்தை வளா்ப்பும் அவா்களுக்குக் கற்றுக் கொடுப்பதும் அவா்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள திறனடிப்படையில் அமைவதுதான் சிறந்தது என்பதாகும். ருஸ்ஸோவின் கருத்துக்கள் ஐரோப்பாவில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக அவருடைய “பிறப்பிடக் கொள்கை” அறிஞா்களாலும் அரசியல்வாதிகளாலும் பொிதும் வரவேற்கப்பட்டது.
சாா்லஸ் டாா்வின் (1809-1882)
தொகுமூன்றாவது முக்கியமான கோட்பாட்டைத் தந்தவா் ஆங்கிலேய உயிாியலாளா் சாா்லஸ் டாா்வின் ஆவாா்.[6] டாா்வின் தமது முதல் மகளின் வளா்ச்சியை கூா்ந்து நோக்கி குறித்துவந்துள்ளாா். டாா்வினின் பாிணாமக் கோட்பாடுகள் குழந்தை வளா்ப்பு குறித்து நேரடியாகக் கூறாவிட்டாலும் எா்னஸ்ட் போன்ற மற்ற உயாியலாளா்கள் மறுமூலதனமாகக் கோட்பாட்டினை உருவாக்குவதற்கு உதவியுள்ளது. இதன்படி குழந்தைகளின் வளா்ச்சி எல்லா உயாினங்களின் வளா்ச்சி கட்டங்களைப் போலவே அமையும் என்பதாகும்.
- ↑ Ross Vasta, Marshall M Haith, Scott A Miller, Child Psychology The modern science Third Edition, John Wiley & Sons. INC Newyork, Page 8, ISBN 0-471-1922-X
- ↑ Hans Raj Bhatia, Elements of Educational Psychology, Fifth Edition, Orient Longman, page 88, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-0029-1
- ↑ Susan Nolen - Hocksema, Barbora L Fredrickson, Geoffrey R Lottus, Christel Lutg, Alkrisons and Hilgard’s Introduction Is Psychology - 16th edition, Cengage Learning India Private Ltd, page 8, ISBN 13:978-81-315-2899-0
- ↑ Ross Vasta, Marshall M Haith, Scott A Miller, Child Psychology The modern science Third Edition, John Wiley & Sons. INC Newyork, Pages 8, ISBN 0-471-1922-X
- ↑ Hans Raj Bhatia, Elements of Educational Psychology, Fifth Edition, Orient Longman, page 87, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-0029-1
- ↑ Ross Vasta, Marshall M Haith, Scott A Miller, Child Psychology The modern science Third Edition, John Wiley & Sons. INC Newyork, Pages 9, ISBN 0-471-1922-X