ஆரல்வாய்மொழி மீனாட்சி அம்மன் திருக்கோவில்

ஆரல்வாய்மொழி மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

இக்கோயில் மதுரைக்கு அடுத்தபடியாக கருதப்படுகின்ற இக்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் வடக்கூர்ப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலின் நிர்வாகம் தமிழ்நாடு திருக்கோவில்கள் அறநிலையத்துறையினரால் நடத்தப்படுகிறது.

மூலவர்

தொகு

மூலவராக பரகோடி கண்டன் சாஸ்தா உள்ளார். கோவிலின் தலபுராணத்தில் சாஸ்தாவைப் பற்றியும், மீனாட்சியம்மனைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன. தல புராணத்தில் மூல தெய்வமான சாஸ்தா சுயம்புவாக உருவானவர் என்று கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் இப்பகுதியில் தொண்டைமான் பரவர்கள் என்னும் சமூகத்தினர் வாழ்ந்து வந்ததாகவும், அவர்கள் வேட்டைக்குச் சென்றபோது செடிக்குள் ஓடி ஒளிந்த முயலை வேட்டையாடும் நோக்கில் வேலால் குத்தியபோது ரத்தம் வந்ததாகவும், செடிகளை விலக்கி முயலை எடுக்க முயற்சித்தபோது அங்கே ஒரு மூர்த்தியின் அடையாளத்தை கண்டதாகவும் கூறப்படுகிறது. முதலில் சாஸ்தாவை அவர்கள் கண்டதால் அவருக்கு பரகோடி கண்டன் சாஸ்தா என்று பெயரிட்டு அழைக்க ஆரம்பித்துள்ளனர்.[1]

விழாக்கள்

தொகு

இந்தக் கோவிலில் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழாவும், சித்திரை மாதம் 4 நாட்கள் திருக்கல்யாண விழாவும், தம்புரான் கொடை விழா என மூன்று முக்கிய விழாக்கள் நடக்கிறது.[1] இவ்விழாக்களில் அருகாமையிலுள்ள ஊர்களிலிருந்து மக்கள் கலந்து கொள்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு