ஆராங்கு
ஆராங்கு அல்லது பாலா மீன் (Roosterfish) என்பது ஒரு மீன் இனம் ஆகும். இது பெரும்பாலும் பாகா கலிபோர்னியாவிலிருந்து பெரு வரை கிழக்கு பசிபிக்கின் வெப்பமண்டல கடல் நீரில் காணப்படுகிறது.[1] நெமாடிஸ்டியஸ் இனத்தில் மற்றும் நேமாடிஸ்டிடே குடும்பத்தில் உள்ள ஒரே மீன் இனம் இது. இது அதன் "சேவல் கொண்டை", முதுகு துடுப்பின் ஏழு மிக நீண்ட முட்களால் தனித்து அடையாளம் காணப்படுகிறது.
ஆராங்கு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Nematistius |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/NematistiusN. pectoralis
|
இருசொற் பெயரீடு | |
Nematistius pectoralis T. N. Gill, 1862 |
ஆராங்கு மீனின் பள்ளை என்ற காற்றுப் பைக்கும், அதன் மூளைக்கும் எலும்புத் துளைகள் வழியாக தொடர்பு உண்டு. அதுபோல அதன் உட்புற செவிக்கும் தொடர்பு உண்டு. இதனால் விந்தையான ஒலியை இந்த மீனால் எழுப்ப இயலும்.
ஆராங்கு மீனானது 1.6 மீ (5 அடி 3 அங்குலம்) நீளம் வரையும், 50 கிலோ (110 பவுண்ட்) எடை வரையும் எட்டும். இந்த மீன்களின் சராசரி எடை சுமார் 20 பவுண்ட் (9.1 கிலோ) ஆகும். இந்த மீன் தூண்டில் மீன்பிடி விளையாட்டுகளில் பிரபலமானது, ஆனால் இது ஒரு நல்ல உணவு மீனாக கருதப்படவில்லை. இதை பிடித்து விட்டுவிட கடுமையாக பரிந்துரைக்கப்படுகிறது.
குறிப்புகள்
தொகு- ↑ Santella, Chris (July 31, 2010). "When the Roosterfish Start to Run, Anglers Just Try to Keep Up". The New York Times. https://www.nytimes.com/2010/07/31/sports/31roosterfish.html?scp=1&sq=roosterfish&st=cse.