ஆரையம்பதி மகா வித்தியாலயம்

ஆரையம்பதி மகா வித்தியாலயம் இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு தமிழ்ப் பாடசாலை ஆகும். இது மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலையில் மட்டக்களப்பில் இருந்து 6 கிலோ மீற்றர் துாரத்தில் அமைந்துள்ளது.

ஆரையம்பதி மகா வித்தியாலயம்
அமைவிடம்
மட்டக்களப்பு, கிழக்கு மாகாணம், 31000
இலங்கை
தகவல்
வகைஅரச பாடசாலை 1AB
நிறுவல்1957
பள்ளி மாவட்டம்மட்டக்களப்பு கல்வி வலயம்
ஆணையம்கல்வியமைச்சு
மொழிதமிழ்
இல்லங்கள்சேரன் ,சோழன், பாண்டியன்
விளையாட்டுக்கள்உதைப்பந்தாட்டம்

வரலாறு தொகு

1957 களில் ஆரையம்பதியில் இருந்து காத்தான்குடி பாடசாலைகளுக்கு சென்று உயர்கல்வியை பெற்றுக்கொள்வதில் எழுந்த இனவாதத்தை அடிப்படையாக கொண்ட தடைகளின் காரணமாக ஊர் பிரமுகர்கள் சேர்ந்து ஆரையம்பதி முகத்துவாரத் தெருவில் 1957 அக்டோபர் 23 அன்று “தமிழ்கலவன் பாடசாலை“ எனும் பெயருடன் 12 மாணவர்களைக்கொண்டு இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.[1] இதற்காகக் காணிகளை ப. க. சுப்பிரமணியம் என்பவர் நன்கொடையாக வழங்கியிருந்தார். 2008 ஆண்டளவில் 40 இற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் 5 கல்விசாரா ஊழியர்கள் உட்பட 900 மாணவர்களையும் இது கொண்டுள்ளது.

முக்கிய கட்டங்கள் தொகு

இப்பாடசாலை வரலாற்றின் முக்கிய காலகட்டங்கள் வருமாறு:[2]

  • 1978 இல் ஏற்பட்ட சூறாவழி மூலம் பாதிப்புக் குள்ளானது.
  • 1990 ஆம் ஆண்டு இப்பாடசாலை கொத்தணிப்பாடசாலையாக திறமையாகச் செயற்பட்டு வந்தது.
  • 1999 இல் இலங்கைப் பாதுகாப்புப் படைமுகாமாக மாற்றப்பட்டத்து.
  • 2004 ஆம் ஆண்டு கடற்கோள் அனர்த்ததில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓர் ஆதரவளிக்கும் தங்குமிடமாகச் சுமார் 3 மாதங்கள் செயற்பட்டது.
  • 2006 ஆம் ஆண்டில் இப்பாடசாலையில் ஜனாதிபதியின் நடமாடும் செயலகம் நடத்தபபட்டு ஆயிரக்கணக்கான மக்கள் அதன் மூலம் நன்மையடைந்தனர்.
  • 2006 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழாவின்போது பாடசாலையின் முக்கிய நிகழ்வாக ‘ஆரணி’ என்ற நூல் கன்னி மலராக வெளியிடப்பட்டது.
  • 2007 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் காணப்பட்ட யுத்தச் சூழல் காரணமாக ஏற்பட்ட பிராந்திய இடப்பெயர்வின்போது இப்பாடசாலை ஓர் இடைத்தங்கல் முகாமாக சுமார் 4 மாதகாலம் இயங்கியது.
  • பல்வேறுபட்ட தடைகள், இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு தொடர்ந்தும் கலவன் பாடசாலையாக இயங்கும் இப்பாடசாலை 2005 மே 1 இல் 1AB தரப்பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.
  • 2009 ஆம் ஆண்டு முதல் உயர் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் மாணவர்கள் கல்வி கற்கக்கூடியதாக அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அதிபர்கள் தொகு

கடமையாற்றிய அதிபர்கள்[3]
பெயர் தொடக்கம் வரை
திரு.ரி.துரைச்சாமி    23.10.1957 02.03.1959
திரு.எஸ்.சோமசுந்தரம்   03.03.1959 01.01.1960 
திரு.ஏ.நாகையா   02.01.1960 01.01.1961
திரு.வீ.ரி.சின்னையா  02.01.1961 05.01.1965
திரு.அ.யோ.வீரசிங்கம்  06.01.1965 31.08.1965
திரு.எஸ்.தம்பிராசா  01.09.1965 15.09.1965
திரு.மு.தவகுலரெட்னம் 16.09.1965 18.01.1969
திரு.ஜோர்ச்.சோமநாதன் 19.01.1969 25.06.1969
திரு.எஸ்.சிவலிங்கம் 26.06.1969 31.12.1972
திரு.ஏ.பரமாநந்தம்  01.01.1973 07.01.1979
திரு. .ஸ்ரீராஜசிங்கம் 08.01.1979 11.01.1981
திரு.என்.வாமதேவன் 12.01.1981 06.01.1985
திரு.ஈ.கணபதிப்பிள்ளை  07.01.1985 28.05.1989
திரு.ரி.சச்சிதாநந்தமுதலி 25.05.1989 14.06.1989
திரு.எஸ்.இராமச்சந்திரன்   15.06.1989 01.01.1992
திரு.ஆர்.துரைராஜசிங்கம் 02.01.1992 14.06.1994
திரு.கே.சோமசுந்தரம் 15.06.1994 05.01.1995
திரு.ஆர்.துரைராஜசிங்கம்  06.01.1995 12.10.1995
திரு.கே.தேவலிங்கம்   13.10.1995 31.10.1995
திரு.சி.சுந்தரம்பிள்ளை 01.11.1995 16.10.1998
செல்வி.மா.நேசசவுந்தரி 17.10.1998 31.11.1998
திரு.ந.சிதம்பரமூர்த்தி  01.12.1998 31.08.2004
திரு.ப.ஜீவானந்தம் 01.09.1994 10.11.2004
மா. தங்கவடிவேல் 2004

காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. கதிரவன் - கலை இலக்கிய சஞ்சிகை 2009 (பக் -46)
  2. வீரகேசரி 30 அக்டோபர் 2008
  3. கதிரவன் - கலை இலக்கிய சஞ்சிகை 2009 (பக் -48)

வெளி இணைப்புகள் தொகு