ஆரோக்கிய அன்னை தேவாலயம், வடுகர்பேட்டை
ஆரோக்கிய அன்னை தேவாலயம், வடுகர்பேட்டை என்பது வீரமாமுனிவரால் உருவாக்கப்பட்ட ஒரு தேவாலயம் ஆகும். இந்த தேவாலயமானது திருச்சி அரியலூர் நெடுஞ்சாலையில் 40 கி.மீ தொலைவில் உள்ள வடுகர்பேட்டையில் அமைந்துள்ளது. இவ்வூர் வீரமாமுனிவர், அருளானந்தர் ஆகியோர் வாழ்ந்த பெருமை பெற்றது. இந்த ஊர் திருச்சி மாவட்டத்தின் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து வீரமாமுனிவரால் கொண்டு வரப்பட்ட ஆரோக்கிய அன்னையின் சொரூபம் இந்த ஆலயத்தில்தான் உள்ளது.[1] இந்த ஆலயத்தில் உள்ள மணி அருட்தந்தை மேத் சுவாமிகளால் பிரான்சு நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது. கி.பி. 1670-ஆம் ஆண்டில் திருச்சி நவாப் மன்னரால் அதிக நிலங்கள் இந்த ஆலயத்திற்கு மானியமாக அளிக்கப்பட்டது. புதிய ஆலயம் பக்தர்களின் வசதிக்காக விரிவுபடுத்தபட்டு 1977-ஆம் ஆண்டில் புனிதப்படுத்தப்பட்டது. அனைத்து மதத்தினரும் இவ்வாலயத்தில் உள்ள அன்னையை தரிசித்து வருகின்றனர்.
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "322 ஆரோக்கிய அன்னை திருத்தலம், வடுகர்பேட்டை". பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.