ஆரோன் ஸ்டான்போர்ட்

நடிகர்

ஆரோன் ஸ்டான்போர்ட் (பிறப்பு: டிசம்பர் 27, 1976) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3 போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

ஆரோன் ஸ்டான்போர்ட்
2013 காமிக் மாநாட்டில் ஸ்டான்போர்ட்
பிறப்புதிசம்பர் 27, 1976 ( 1976 -12-27) (அகவை 46)
மாசசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2001–தற்சமயம்

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ஸ்டான்போர்ட் டிசம்பர் 27, 1976ம் ஆண்டு வேச்த்போர்ட், மாசசூசெட்ஸ் அமெரிக்கா வில் பிறந்தார். இவர் ஜூடித்தின் மகன் ஆவார். இவர் ஒரு ஆங்கில பேராசிரியர். இவரது சகோதரர் டேவிட் ஒரு இசைக்கலைஞர்.

தொழில் தொகு

இவர் 2001ம் ஆண்டு திர்ட் வாட்ச் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்பு துறைக்கு அறிமுகமானார், அதை தொடர்ந்து 2002ம் ஆண்டு தட்போலே என்ற திரைப்படத்தில் நடித்தார், 2003ம் ஆண்டு எக்ஸ்-மென் 2 என்ற சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார், 2006ம் ஆண்டு வந்த எக்ஸ்-மென் 3 மூன்றாம் பாகத்திலும் நடித்தார், இந்த திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இவர் மேட் மென், ஃபியர் இட்செல்ப் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது நிகிதா என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துகொண்டு இருகின்றார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரோன்_ஸ்டான்போர்ட்&oldid=3189753" இருந்து மீள்விக்கப்பட்டது