ஆர்சனியோசிடரைட்டு
ஆர்சனேட்டுக் கனிமம்
ஆர்சனியோசிடரைட்டு (Arseniosiderite) என்பது Ca2Fe3+3(AsO4)3O2·3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஒர் அரியவகை ஆர்சனேட்டு கனிமமான இது சிகோரோடைட்டு அல்லது ஆர்சனோபைரைட்டு போன்ற ஆர்சனிக்கை கொண்டுள்ள கனிமங்களின் ஆக்சிசனேற்ற வினையினால் உருவாகிறது.
ஆர்சனியோசிடரைட்டு Arseniosiderite | |
---|---|
ஆர்சனியோசிடரைட்டு, அளவு: 6.4×6.2×5.6 மி.மீ | |
பொதுவானாவை | |
வகை | ஆர்சனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Ca2Fe3+3(AsO4)3O2•3H2O |
இனங்காணல் | |
மோலார் நிறை | 766.50 கி/மோல் |
நிறம் | வெங்கலப் பழுப்பு; மஞ்சள் கலந்த கருப்பு |
படிக இயல்பு | இழை |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு |
பிளப்பு | {100} நன்று |
மோவின் அளவுகோல் வலிமை | 4.5 |
மிளிர்வு | உலோகக் குறைவு பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெளிறிய பழுப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது அல்லது கசியும் |
ஒப்படர்த்தி | 3.5–3.9, சராசரி = 3.7 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.815, nβ = 1.898, nγ = 1.898 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.083 |
பிற சிறப்பியல்புகள் | ஒளிராது |
மேற்கோள்கள் | [1][2][3] |
பியூதாண்டைட்டு, கார்மினைட்டு, துசெர்டைட்டு, பார்மாகோலைட்டு, பிட்டிசைட்டு, அடமைட்டு, எரித்ரைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து ஆர்சனியோசிடரைட்டு தோன்றுகிறது[3]. கனிமத்தின் பெயரிலிருந்தே இதன் உட்கூறுகளாக ஆர்சனிக்கும் இரும்பும் உள்ளன என்பதை அரிய முடியும். கிரேக்க மொழியில் சிடரோசு என்ற சொல்லின் பொருள் இரும்பாகும்.
பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் ஆர்சனியோசிடரைட்டு கனிமத்தை Assd[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Arseniosiderite. Mindat.org
- ↑ Arseniosiderite. Webmineral.com
- ↑ 3.0 3.1 Arseniosiderite. Handbook of mineralogy
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.