ஆர்தர் இசுரேல் வோகெல்

வேதியியலாளர்

ஆர்தர் இசுரேல் வோகெல் (Arthur Israel Vogel) என்பவர் பிரித்தானிய வேதியியலாளர் ஆவார். 1905 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் நாள் இவர் பிறந்தார். எழுதிய பாடப்புத்தகங்களுக்காக இவர் நன்கு அறியப்படுகிறார். வேதியலுக்கான வேந்திய நிறுவனத்தின் உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்படிருந்தார். இலண்டன் நகரத்தில் பிறந்து வளர்ந்த இவர் அங்கேயே கல்வி கற்றார். இங்கிலாந்தின் இலண்டன் நகரத்திலிருந்த ஊல்விச்சு பல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேதியியல் துறையின் தலைவராகப் பணியாற்றினார்.

கீழ்கண்டுள்ள பாடநூல்கள் இவர் எழுதியவையாகும்.:[1]

  • பண்பறி பகுப்பாய்வு வேதியியல் பாடப்புத்தகம் (1937)
  • பருமனறி பகுப்பாய்வு வேதியியல் பாடப்புத்தகம் (1939)
  • செயல்முறை கரிம வேதியியல் (1948)

இந்த படைப்புகள் திருத்தப்பட்டு பல பதிப்புகளில் மொழிபெயர்க்கப்பட்டன. எனவே இந்த துறையில் இவை கலைக்களஞ்சியங்களாகக் கருதப்பட்டன. வோகல் இறந்த பிறகு புதிய எழுத்தாளர்களால் மேலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. எடுத்துக்காட்டாக பண்பறி பகுப்பாய்வு வேதியியல் பாடப்புத்தகம் பெரு மற்றும் அரை நுண்ணிய பண்பறி கனிமவேதியியல் பகுப்பாய்வு என்ற புத்தகமாக தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு கி.சிவெக்லா புதிய திருத்தங்களுடன் இந்நூலை பதிப்பித்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Fred Parrett (2010), Arthur Vogel's impact, Society of Chemical Industry
  2. Ros Herman (1 March 1979), "Editions New and Revised", New Scientist: 700
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தர்_இசுரேல்_வோகெல்&oldid=4041321" இலிருந்து மீள்விக்கப்பட்டது