ஆர்த்தோஎசுத்தர்
ஆர்த்தோஎசுத்தர் (Orthoester) என்பது கரிம வேதியியலில் RC(OR′)3 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு வேதி வினைக்குழுவைக் குறிக்கும். இதில் மூன்று ஆல்காக்சி குழுக்கள் ஒரு கார்பன் அணுவுடன் இணைக்கப்பட்டிருக்கும். நிலைப்புத்தன்மையற்ற ஆர்த்தோகார்பாக்சிலிக் அமிலங்கள் முழுமையான முழுமையாக ஆல்க்கைலேற்றம் அடைவதால் ஆர்த்தோ எசுத்தர்கள் விளைபொருளாகத் தோன்றுகின்றன. இவற்றின் மூலப்பொருளான ஆர்த்தோ கார்பாக்சிலிக் அமிலத்திலிருந்து ஆர்த்தோ எசுத்தர் என்ற பெயர் வருவிக்கப்படுகிறது. எத்தில் ஆர்த்தோ எசுத்தர் (CH3C(OCH2CH3)3)ஆர்த்தோ எசுத்தருக்கு ஓர் எளிய உதாரணமாகும். மிகச் சரியாக இச்சேர்மத்திற்கு பெயரிடுவது எனில் இதை 1,1,1-டிரையெத்தாக்சியெத்தேன் என்று பெயரிட வேண்டும். கரிமத் தொகுப்பு வினைகளில் ஆர்த்தோ எசுத்தர்கள் எசுத்தர்களுக்கான பாதுகாப்புக் குழுக்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
தொகுப்புமுறை தயாரிப்பு
தொகுபொருத்தமான ஒரு வினையூக்கியின் முன்னிலையில் நைட்ரைல்கள் ஆல்ககால்களுடன் வினைபுரிந்து ஆர்த்தோ எசுத்தர்களைக் கொடுக்கின்றன. இவ்வினை பின்னெர் வினை என்று அழைக்கப்படுகிறது.
- RCN + 3 R′OH → RC(OR′)3 + NH3
வினைகள்
தொகுநீராற்பகுப்பு வினை
தொகுமிதமான நீர்த்த அமிலங்களால் ஆர்த்தோ எசுத்தர்கள் நீராற்பகுக்கப்பட்டு எசுத்தர்கள் உருவாகின்றன.
- RC(OR′)3 + H2O → RCO2R′ + 2 R′OH
உதாரணமாக, மும்மெத்தில் ஆர்த்தோபார்மேட்டு (CH(OCH3)3) அமிலதன்மையான வினையில் நீராற்பகுக்கப்பட்டு மெத்தில் பார்மேட்டு மற்றும் மெத்தனால் ஆகியவற்றைக் கொடுக்கிறது. மேலும் காரத்தன்மையுடன் தொடர்ந்து நீராற்பகுப்படைந்து பார்மிக் அமிலம் மற்றும் எத்தனால் ஆகியவற்றின் உப்புகளாக உருவாகின்றது[1]
= யான்சன் கிளெய்சன் மறுசீரமைப்பு வினை
தொகுடிரையெத்தில் ஆர்த்தோ அசிட்டேட்டு போன்ற புரோட்டானேற்ற நீக்க ஆல்பா கார்பன் கொண்டுள்ள ஆர்த்தோ எசுத்தருடன் அல்லைலிக் ஆல்ககால் வினைபுரிந்து γ,δ- நிறைவுறா எசுத்தரைக் கொடுக்கிறது [2]
போட்ராக்சு-சிச்சிபாபின் ஆல்டிகைடு தொகுப்பு வினை
தொகுபோட்ராக்சு-சிச்சிபாபின் ஆல்டிகைடு தொகுப்பு வினையில் ஆர்த்தோ எசுத்தர் ஒன்று கிரிக்னார்டு வினைப்பொருளுடன் வினைபுரிந்து ஓர் ஆல்டிகைடைத் தருகிறது. இவ்வினை பார்மைலேற்ற வினைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
பயன்
தொகுபாதுகாப்புப் பொருளாக
தொகுமும்மெத்தில் ஆர்த்தோ அசிட்டேட்டு, மூயெத்தில் ஆர்த்தோ அசிட்டேட்டு இரண்டும் கரிமத் தொகுப்பு வினைகளில் பொதுவாக வினைப்பொருள்களாகப் பயன்படுகின்றன. (4-மெத்தில்-2,6,7-டிரையாக்சோ-பைசைக்ளோ[2.2.2]ஆக்டேன்-1-ஐல்) என்ற பைசைக்ளிக் சேர்மம் பாதுகாப்புக் குழுவுக்கு மற்றொரு உதாரணமாகும். இலூயிசு அமிலங்கள் முன்னிலையில் செயலாக்க கார்பாக்சிலிக் அமிலங்கள் மீது 3-மெத்தில் ஆக்சிடென்-3-ஐல் வினைபுரிவதால் இப்பாதுகாப்புக் குழு உருவாகிறது. எலியசு யேம்சு கோரி இவ்வினையை உருவாக்கினார். காரநிலைப்புத்தன்மை கொண்ட இக்குழுவை மிதமான நிபந்தனைகளுக்கு உட்படுத்தி இரண்டு படிநிலைகளில் பிளக்க முடியும். மிதமான அமில நீராற்பகுப்பில் டிரிசு(ஐதராக்சிமெத்தில்)ஈத்தேன் உருவாகி பின்னர் நீரிய கார்பனேட்டு கரைசலில் மீண்டும் இது பிளவுபடுகிறது [3].
பலபடி வேதியியலில்
தொகுபல்லாக்சோ எசுத்தர்களிலும் ஒருபடிகளை விரிவாக்குவதிலும் ஆர்த்தோ எசுத்தர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ United States Patent Application 20070049501, Saini; Rajesh K.; and Savery; Karen, March 1, 2007
- ↑ Johnson, William Summer.; Werthemann, Lucius.; Bartlett, William R.; Brocksom, Timothy J.; Li, Tsung-Tee.; Faulkner, D. John.; Petersen, Michael R. (February 1970). "Simple stereoselective version of the Claisen rearrangement leading to trans-trisubstituted olefinic bonds. Synthesis of squalene". Journal of the American Chemical Society 92 (3): 741–743. doi:10.1021/ja00706a074.
- ↑ Kocieński, Philip J. (2005). Protecting groups (3. ed.). Stuttgart: Thieme. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-13-135603-1.