ஆர்யா பல்லம்

இந்திய சமூக சீர்திருத்தவாதி

ஆர்யா பல்லம்

ஆர்யா பல்லம் (Arya Pallam) என்பவர் ஓர் சமூக சீர்திருத்தவாதி, பொதுவுடைமைக்கொள்கையர் மற்றும் கேரள மாநிலத்தில் உயர்வர்க்க பெண்களின் அடக்கு முறைகளுக்கு எதிராக போராடிய பெண்ணியவாதி ஆவார்.

சீர்த்திருத்த நடவடிக்கைகள்

தொகு

ஆர்யா அவர்கள், காஞ்சூர் கௌரி அந்தர்ஜனம், காஞ்சூர் காளி அந்தர்ஜனம் என்பவர்களுடன் இணைந்து, யாஞ்சனா யாத்திரையில் பங்கேற்றார்.[1] இந்த யாத்திரைக்கு வி.டி. பத்ரிபாத் தலைமை வகித்தார். பிராமண பெண்களின் முகத்திரையை களைவதே யாஞ்சனா யாத்திரையின் நோக்கமாகும்.[2] பெண்களின் முன்னேற்றத்திற்காக யோகேஷ்மாசபா என்ற அமைப்பு பத்ரிபத் என்பவரால் உருவாக்கப்பட்டு அவரது இல்லத்திலே நடைபெற்றது.பிராமணப் பெண்களின் கற்புக்கு அடையாளமாகக் கருதப்பட்ட காஜட் குடையயை புறக்கணிப்பதே ஆர்யா பல்லம் மற்றும் பார்வதி நென்மணிமங்கலம் என்பவர்களின் தலைமையின் கீழ் நடத்தப்பட்ட கூட்டத்தின் நோக்கமாக இருந்தது. இந்த யோகேஷ்மாசபா கூட்டத்திலும் காஜட் குடையை பயன்படுத்தாமல் நடத்தினர். இதே போன்றே தளிபரம்பா என்ற அமர்வில் ஆர்யா பல்லம், நென்மணிமங்கலம், தேவகி நரிகத்தாரி இணைந்து பெண்கள் முகத்திரையை நீக்க வேண்டும் என்று போராடினர்.மேலும், மரக்குடா(காஜட் குடை)பெண்களின் கற்பை குறிப்பிடவில்லை என்று கூறி மரக்குடையை உடைத்தனர். மேலும், பிராமணப் பெண்கள் புடவை அணிவது போல் அணியாமல் மற்ற இந்தியப் பெண்கள் அணிவது போல் புடவை அணிந்து கொண்டனர். யோகேஷ்சபாவின் மற்றொரு அமர்வானது பல்லூரில் கே.என். குட்டன் நம்பூதிரி என்பவரின் தலைமையில் நடைபெற்றது.[3] இந்த அமர்வில் ஆர்யா அவர்கள் பெண்களுக்கு வீட்டிற்குள் ஏற்படும் அடக்குமுறையை களைவதற்கு அந்தப்புரம் மர்தனாநேசனம்என்ற தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார்.[4] ஆர்யா பல்லம் 1947 முதல் 1948ஆம் ஆண்டு வரை பில்லியம் சத்யாக்ரகாவில் ஈடுபட்டார். இவருடன் பி. பிரியாதத்தா, இ.எஸ். சரஸ்வதி, ஐ.சி. பிரியாதத்தா, ரேமா தம்புரட்டி மற்றும் இந்திரா தம்புரட்டி ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். [5]

ஆர்யா பல்லம் மலபார் மாவட்ட வாரியத்தின் உறுப்பினராகவும், கதுமுரி இயக்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

கேரள பிராமண சமூகத்தினரிடையே முதல் விதவை மறுமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்வதில் முக்கியப் பங்கு வகித்தார். எம்.ஆர். பட்டாத்ரிபாத் திருமணம் நடைபெற்ற பிறகு, அவரது மனைவியுடன் சிறிது காலம் ஆர்யா பல்லம் குடும்பத்துடன் தங்கினர். [6]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஆர்யா பல்லம், கிருஷ்ணா நம்பூதிரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நம்பூதிரி பொதுவுடைமைக் கட்சியின் முழு நேரப் பணியாளராக இருந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். முன்று மகள்கள் ஒரு மகன். மகன் சிறு வயதிலேயே இயற்கை எய்தினான்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. George, Ginu (2017). "Yogakshema Sabha and women empowerment". International Journal of Applied Research 3 (1): 792–794. http://www.allresearchjournal.com/archives/2017/vol3issue1/PartK/3-1-153-492.pdf. 
  2. Calicut, Namboothiri Websites. "Antharjana Samaajam". www.namboothiri.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-10.
  3. Reforming the Identity of Namboodiri Women (PDF).
  4. Reforming the Identity of Namboodiri Women (PDF).
  5. M.B., Smina (2014). "Paliyam Satyagraha: A Struggle for Public Domain". VISTAS 3: 65–69. http://groupexcelindia.com/vistas/vol_3_no_1_2014/pdf/11_PALIYAM_SATYAGRAPHA-A_STRUGGLE.pdf. பார்த்த நாள்: 10 August 2018. 
  6. 6.0 6.1 jdevika (2020-08-29). "Remembering Arya Pallom: Devaki Nilayangode". Swatantryavaadini (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்யா_பல்லம்&oldid=3986469" இலிருந்து மீள்விக்கப்பட்டது