ஆர்ய பூங்கனி

ஆர்யக்காரகனி என்றும் அழைக்கப்படும் ஆர்ய பூங்கனி, இந்தியாவின் கேரளாவில் உள்ள வட மலபார் பகுதியில் வழிபடப்படும் ஒரு பெண் தெய்வம் ஆகும். ஆர்ய பூங்கனி கடவுளை ஆர்ய பூங்கனி தெய்யமாக (நடனத்தோடு)  வழிபட்டு ஆடுகிறார்கள் . ஆர்ய பூங்கனியின் தெய்யத்துடன், பப்பிரியன் தெய்யமும் அதன் சன்னதியில் ஆடப்படுகிறது. முஸ்லீம் என்று நம்பப்படும் பப்பிரியன் மற்றும் இந்து தெய்வமான ஆர்ய பூங்கனியின் புராணம் கேரளாவில் இந்து-இஸ்லாமிய மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

ஆர்ய பூங்கனி
ஆர்ய பூங்கனித் தெய்யத்தின் முகக் கலையுடன் ஒரு தெய்ய கலைஞர்
வகைஇந்து சமயம்
சமயம்வடக்கு மலபார், கேரளம், இந்தியா

புராணக்கதை

தொகு

புராணங்களின் படி, ஆர்ய பூங்கனி ஆர்யபட்டர் மற்றும் ஆர்யப்பட்டத்தியின் மகளாக பிறந்தார். [1] அவள் வளர வளர, ஆபரணங்கள் மற்றும் நகைகள் மீது ஆசை கொண்டாள். ஒரு கட்டத்தில் ஆசை வெறியாக மாறியது. .

அவளது திருமணத்துக்காக முத்துக்களை தேடி ஆழ்கடலில் பயணித்த ஆர்ய பூங்கனியும் அவரது சகோதரர்களும் கடும் புயலில் சிக்கினர். [1] அவர்கள் வந்த கப்பல் புயலில் சிக்கி சிதைந்தது. சிதைந்த கப்பலின் உடைசல்களைப் பிடித்து ஏழு நாட்கள் கடலில் கழித்தார்கள், எட்டாவது நாளில் அவர்கள் அனைவரும் கரைக்கு கண்டடைந்தனர். கரையை அடைந்ததும் ஒருவரை ஒருவர் பிரிந்து வெவ்வேறு ஊர்களுக்கு சென்றனர்.

மறுபடியும் கடலுக்கு எவ்வாறு செல்வது என்று கவலைப்பட்ட ஆர்ய பூங்கனி, முஸ்லீம் மாலுமியான பப்பிரியன், ஒரு சிறிய படகில் கடலுக்கு செல்வதைக் கண்டாள். ஆர்ய பூங்கனி அவரிடம் உதவுமாறு கேட்க, பப்பிரியனோ அவளது அழைப்பை புறக்கணிக்கிறார், ஆனால் ஆர்ய பூங்கனி தனது மந்திர திறமையால் அவரை ஆச்சரியப்படுத்தி, அவளது சகோதரர்களை கண்டறிய உதவுமாறு பப்பிரியனை சம்மதிக்க வைக்கிறாள். இருவருமாக அவளது சகோதரர்களை தேடி ஒவ்வொரு துறைமுகங்களாக சென்று, கடைசியாக வெண்மலாதிங்கரையில் அவளுடைய சகோதரர்களைக் கண்டுபிடித்தாள், ஆனால் அவர்களோ அவளுடன் செல்லத் தயாராக இல்லை, மேலும் அங்கேயே குடியேற முடிவு செய்தனர். எனவே ஆர்ய பூங்கனியும் பாப்பிரியானும் மேற்கொண்டு பயணம் செய்து வட மலபார் கடற்கரையில் உள்ள கூரன் மலையை அடைகின்றனர். அங்கு தளிப்பறம்ப கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். [2] தளிபரம்பாவில் உள்ள கோவிலுக்குப் பிறகு தான், வட மலபார் பகுதி முழுவதும் பல கோவில்கள் கட்டப்பட்டன.

தெய்யம்

தொகு

ஆர்யகாரகன்னி மிகவும் அழகான முகக்கலை மற்றும் மெதுவான அசைவுகளைக் கொண்ட ஒரு தேயம். பாதணிகள் ஏதுமின்றி ஆடும் மற்ற பெரும்பாலான தேயங்களைப் போலல்லாமல், ஆர்ய பூங்கனித் தேயம் மரத்தினால் செய்யப்பட்ட பாரம்பரிய காலணிகளை அணிந்து காட்சியளிக்கிறது. [1] கடலில் வீரமரணம் அடைந்த பாப்பிரியன், காசர்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் தெய்வக்கோலமாக கொண்டாடப்படுகிறது. [3] , ஆரியப்பூங்கண்ணி-பபிரியன் தேயங்கள் புராணங்களில் பதிவுசெய்யப்பட்ட இந்து-இஸ்லாமிய மத நல்லிணக்கத்தின் மகுடமான எடுத்துக்காட்டுகளாகும். [1] கோவில் வளாகத்தில் உள்ள பழமையான மரம், கோவிலின் பழமைக்கு சான்றாக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "മലബാറിലെ 'ബപ്പിരിയൻ' തെയ്യത്തെക്കുറിച്ച്". Samayam Malayalam (in மலையாளம்). The times of India. பார்க்கப்பட்ட நாள் 26 February 2023.
  2. സന്തോഷ്, യു പി. "ബപ്പിരിയന്‍ തെയ്യം". www.janmabhumi.in. Janmabhumi. பார்க்கப்பட்ட நாள் 2023-02-26.
  3. "മതമൈത്രിയുണർത്തി മാപ്പിളപ്പൊറാട്ടുകൾ ഉറഞ്ഞാടി". Mathrubhumi (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்ய_பூங்கனி&oldid=3702338" இலிருந்து மீள்விக்கப்பட்டது