ஆர்-7 ஏவுகணை
ஆர்-7 (R-7, ரசிய மொழியில்: P-7) சோவியத் ஒன்றியத்தால் பனிப்போர்க் கால கட்டத்தில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஏவுகணையாகும். இதுவே உலகின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும். இது 1959 முதல் 1968 வரை சோவியத் ஒன்றியத்தால் பயன்படுத்தப்பட்டது. மேற்குலகத்தில் எஸ்எஸ்-6 சாப்வுட் (நேட்டோ அறிவிப்பு பெயர்) என்று இது அறியப்பட்டது. சோவியத் ஒன்றியத்தில் "ஜிஆர்எயு சுட்டெண் 8கே71" எனும் பெயரால் அறியப்பட்டது. இதன் மாறுபட்ட வடிவமைப்பே இசுப்புட்னிக் 1 செயற்கைகோளை விண்ணில் ஏவப் பயன்படுத்தப்பட்டது. சோயுஸ் விண்வெளி ஏவு வாகனம், மோல்னியா, வோஸ்டாக், வோச்காத் ஏவு வாகனங்கள் வடிவமைக்க அடிப்படையாக அமைந்தது.
இதற்கு "செம்யோர்கா" என்ற பட்டைப் பெயரும் உண்டு. ரசிய மொழியில் இது "எண் 7" (அ) "ஏழு மனிதர்களின் கூட்டம்" எனப் பொருள்படும்.[1][2][3]
விவரணை
தொகுR-7 ஏவுகணையானது 34 மீட்டர் உயரமும் 3 மீட்டர் விட்டமும் 280 மெட்ரிக் டன்கள் எடையும் கொண்டது. இது இருநிலைகள் கொண்டது. அவை திரவ ராக்கெட் எஞ்சினால் இயக்கப்படும். எரிபொருள்: திரவ ஆக்சிஜன் மற்றும் கெரோசின். சுமந்து செல்லும் வெடிபொருளை 8,800 மீட்டர் தொலைவு தாண்டி 5 மீட்டர் துல்லியத்துடன் தாக்கவல்லது. 3 மெகாடன் டிஎன்டி வெடிபொருளின் திறன் கொண்ட அணுஆயுதம் இதன்மூலம் ஏந்தி செல்லப்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rocket R-7". S.P.Korolev RSC Energia. Archived from the original on 30 March 2020. பார்க்கப்பட்ட நாள் 2 February 2003.
- ↑ Harford, James (1997). Korolev: How One Man Masterminded the Soviet Drive to Beat America to the Moon. John Wiley & Sons. pp. 92–93. ASIN 0471327212.
- ↑ Huntress, Wesley; Marov, Mikhail (2011). Soviet Robots in The Solar System: Mission Technologies and Discoveries. Chichester, UK: Praxis Publishing. pp. 63–65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4419-7897-4.