ஆர். எஸ். முகலி
ராம் சிறீ முகலி (Ram Shri Mugali ) (ரங்கநாதா சீனிவாச முகலி) (பிறப்பு 1906 சூலை 15 - இறப்பு: 1993 பிப்ரவரி 20) இவர் கன்னட மொழியில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராவார். கன்னடத்தில் "கன்னட சாகித்ய சரித்ரே" என்ற படைப்பிற்காக 1956 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க மத்திய சாகித்ய அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. பேராசிரியர் முகலியின் புனைபெயர் ரசிகா ரங்கா ("காதல் ரங்கா") என்பதாகும். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் சித்கங்காவில் நடைபெற்ற 44 வது கன்னட இலக்கிய மாநாட்டின் தலைவராக இருந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுமுகலி கர்நாடகாவின் கதக் மாவட்டத்தின் இரான் வட்டத்தில் உள்ள கோல் ஆலூரில் பிறந்தார். 1933 ஆம் ஆண்டில் , சாங்லியில் உள்ள வில்லிங்டன் கல்லூரியில் கன்னட பேராசிரியராக நியமிக்கப்பட்டார். வில்லிங்டனில் இவரது மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சுப்பண்ணா ஏகுண்டி மற்றும் கங்காதர் வி. சித்தல் ஆகியோர் கன்னடத்தில் முக்கிய எழுத்தாளர்களாக மாறினர். ஞானபீட விருது பெற்ற வி.கே.கோகாக் வில்லிங்டன் கல்லூரியில் இவரது சகாவாக இருந்தார். 1966 இல், முகலி வில்லிங்டன் கல்லூரியின் முதல்வராக பணியாற்றிய பின் ஓய்வு பெற்றார். 1967 முதல் 1970 வரை பெங்களூரு பெங்களூர் பல்கலைக்கழகத்தில் கன்னடத் துறையின் தலைவராக பணியாற்றினார். முகலி 20 பிப்ரவரி 1992 இல் பெங்களூரில் காலமானார்.