ஆர். கே. கரஞ்சியா

ஆர். கே. கரஞ்சியா (Rustom Khurshedji Karanjia, செப்டம்பர் 15, 1912 – பிப்ரவரி 1, 2008) என்பவர் இந்திய எழுத்தாளர், இதழாளர் என அறியப்படுகிறார். பிளிட்ஸ் என்னும் இதழின் ஆசிரியராக இருந்தவர்[1] 1941 இல் பிளிட்ஸ் இதழைத் தொடங்குவதற்கு முன்னர் டைம்சு ஆப் இந்தியா நாளிதழின் உதவி ஆசிரியராக இருந்தார்.

ஆர். கே. கரஞ்சியா இப்போதைய பாகித்தானின் ருவெட்டா என்னும் ஊரில் பிறந்தார். இரண்டாம் உலகப் போர் நடந்த போது பர்மா மற்றும் அசாம் போர் முனையில் இருந்து போர் தொடர்பான செய்திகளைத் தொகுத்து செய்தித்தாளுக்கு அனுப்பினார்[2][3]. 1945 ஆம் ஆண்டில் சுபாசு சந்திர போசுவின் நிழற் படங்களை வெளியிட்டார். வின்ஸ்டன் சர்ச்சில், சார்லஸ் டி கோல், ஜமால் அப்துல் நாசிர், குருசேவ், பிடல் காஸ்ட்ரோ, சூ யென் லாய் போன்ற உலகத் தலைவர்களிடம் பேட்டி கண்டு அப்பேட்டி விவரங்களைத் தம் இதழில் வெளியிட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. He launched Blitz on Feb 1, died on Feb 1-it's no coincidence.
  2. "Veteran Journalist R.K. Karanjia Dead", News Post India, 1 February 2008, archived from the original on 2013-01-29, பார்க்கப்பட்ட நாள் 2008-02-29.
  3. "R. K. Karanjia passes away", The Hindu, 1 February 2008, archived from the original on 2008-02-06, பார்க்கப்பட்ட நாள் 2008-02-29.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கே._கரஞ்சியா&oldid=3792154" இலிருந்து மீள்விக்கப்பட்டது