ஆர். பூர்ணிமா

ஆர். பூர்ணிமா (R. Poornima) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.[1] இவர் இளநிலை வணிகவியல் மற்றும் இளங்கலைச் சட்டப் பட்டம் பெற்றவர். சட்டப் படிப்பிற்குப் பின்னர் 2011ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் பணியாற்றத் துவங்கினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாளராகப் பணியாற்றிய பின்னர் விழுப்புரம் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 10ஆம் நாள் கொலிஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் பூர்ணிமாவினை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக இந்தியக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்தார். இதன் பின்னர் இவர் இப்பதவியினை 23 செப்டம்பர் 2024 அன்று ஏற்றார்.[2][3]

மாண்புமிகு நீதியரசர்
ஆர். பூர்ணிமா
நீதிபதி மதராசு உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 செப்டம்பர் 2024
நியமிப்புதிரௌபதி முர்மு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பூர்ணிமா&oldid=4095731" இலிருந்து மீள்விக்கப்பட்டது