ஆர். ராசலட்சுமி

ஆர். ராசலட்சுமி (R. Rajalakshmi) என்பவர் ஓர் இந்திய உயிர் வேதியியலாளர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். இவர் இந்திய குடும்பங்களுக்கு தேவையான பொருளாதார ஊட்டசத்து மிக்க உணவை வளரச்செய்தார்

1926 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கொல்லத்தில் லட்சுமி மீனாட்சி மற்றும் சி.எசு..ராமசாமி அவர்களுக்கு மகளாக பிறந்தார்[1]. இவர் தன் ஐந்து வயதில் தன்னுடைய பெயருடன் ராசாவை இணைத்துக் கொண்டு சென்னையில் வளர்ந்தார். இவருடைய தந்தை தபால் துறையில் தணிக்கை அதிகாரியாக பணிபுரிந்தார்[2].

ராசலட்சுமி புனே வாடிகா கல்லூரியில் பயின்று 1945 ஆம் ஆண்டு கணிதத்தில் பட்டம் பெற்றார். பின் 1945 முதல1948 வரை காஞ்சிபுரத்தில் அறிவியல் கற்பித்தார். லேடி வில்லிங்டன் பயிற்சி கல்லூரியில் 1949 ஆம் ஆண்டு கற்பித்தலில் பட்டம் பெற்றார். திரு.சி வி. ராமகிருட்டிணனை 1951 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பிறகு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார்[3]. 1953 ஆம் ஆண்டு இந்து பனாரசு பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் கலையியல் நிறைஞர் பட்டம் பெற்றார். இவர் 1955 ஆம் ஆண்டு பரோடா பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியல் துறைத் தலைவரானார். 1958 ஆம் ஆண்டு மாண்டிலுல்ள மேக்கில் பல்கலைக் கழகத்தில் உளவியலில் முனைவர் பட்டம் பெற்றார். உளவியலாளர் டோனால்ட் ஓ.ஈப் அவர்களின் வழிகாட்டுதலின் உதவியால் 18 மாதங்களில் முனைவர் ஆனார்.[3][4] பிறகு 1964 ஆம் ஆண்டு பரோடா பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்டார். உயிர் வேதியியல் துறையில் சேர்ந்து உணவு மற்றும் ஊட்டசத்து துறையில் 1967 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 1976 ஆம் ஆண்டு முதல் உயிர் வேதியியல் துறையின் பேராசிரியராகவும், 1884 முதல் 1986 ஆம் ஆண்டுகள் வரை இத்துறையின் தலைவராக பொறுப்பு வகித்தார். 1960 களின் தொடக்கத்தில் திருத்தப்பட்ட யூனிசெப் நிறுவனத்தின் ஊட்டசத்து திட்டத்தைப் பின்பற்றினார். அப்போது ஊட்டசத்து வழிமுறைகள் குறித்த நூல்கள் மேற்கத்திய நாடுகளின் புத்தகங்களையே சார்ந்திருந்தன. இவற்றில் கூறப்பட்டிருந்த உணவுகள் விலை உயர்ந்தாகவும் இந்தியாவில் கிடைக்காத பொருள்களாகவும் இருந்தன.

1990 ஆம் ஆண்டு முதல் கலிபோர்னியா நகரில் உள்ள பெலோ ஆல்டோ என்னும் இடத்தில் தனது கணவர், மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகளுன் வாழ்ந்தார். 2001 ஆம் ஆண்டில் உறவினர்களுடன் வாசிங்டன் நகரத்திற்கு குடிபெயர்ந்தார். சிறுநீரக கோளாறு காரணமாக 2007 ஆம் ஆண்டு சூன் மாதம் காலமானார்.

சொந்த வாழ்க்கை

தொகு

ராசலட்சுமி சி. வி. ராமகிருட்டிணனை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். கட்டுமான உயிரியல் துறையில் நோபல் பரிசு பெற்ற வெங்கடராமன் ராமகிருட்டிணன் மற்றும் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியலாளர் இலலிதா ராமகிருட்டிணன் ஆகிய இருவரும் இவ்விரு குழந்தைகளாவர். .

மேற்கோள்கள்

தொகு
  1. "R. Rajalakshmi". Twentieth-Century Women Scientists (PDF). 1996. pp. 75–85. Archived from the original (PDF) on 2011-11-07. பார்க்கப்பட்ட நாள் 2019-01-28.
  2. Coehn, Fiona (24 November 2009). "A Nobel goes to a member of a Seattle scientific family". The Seattle Post-Intelligencer. http://www.seattlepi.com/local/article/A-Nobel-goes-to-a-member-of-a-Seattle-scientific-893286.php. பார்த்த நாள்: 12 December 2014. 
  3. 3.0 3.1 Ramakrishnan, V. (8 April 2010). "From Chidambaram to Cambridge: a life in science". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-opinion/from-chidambaram-to-cambridge-a-life-in-science/article746075.ece. 
  4. Rajalakshmi, R. (1926–). 1 January 2007. http://www.highbeam.com/doc/1G2-2588819572.html. பார்த்த நாள்: 28 ஜனவரி 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ராசலட்சுமி&oldid=3332745" இலிருந்து மீள்விக்கப்பட்டது