ஆற்காடு பஞ்சாங்கம்
ஆற்காடு பஞ்சாங்கம் என்பது தமிழில் ஆண்டுதோரும் ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்க வெளியீட்டாளர் என்ற வெளியீட்டாளர்களால் வெளியாகும் பஞ்சாங்கப் புத்தகமாகும்.
வரலாறு
தொகுஆற்காட்டைச் சேர்ந்த கா. வெ. சீதாராமய்யர் என்ற சோதிடர் அக்காலத்தில் தமிழகத்து அரச குடும்பங்களான ஆற்காடு நவாபு, சரபோஜி மன்னர் போன்ற குடும்பத்தினருக்கு சோதிடராக இருந்தவர். இவர் ஆண்டுதோறும் அரசர்களுக்கு சோதிடக் குறிப்புகளை கொடுத்துவந்தார். இவர் தமிழ் மாதங்களான சித்திரை முதல் பங்குனி வரை பஞ்சாங்கக் குறிப்பை வெளியிட்டார். அவரது வழியில் அவரது சந்ததியினர் 4-வது தலைமுறையாக தொடர்ந்து 116 ஆண்டுகளாக இந்த பஞ்சாங்கத்தை வெளியிட்டு வருகின்றனர். ஆற்காடு பஞ்சாங்கம் என்ற பெயரில் பல பஞ்சாங்கப் புத்தகங்கள் வெளிவருகின்றன என்பதால் இவர்கள் லாவண்யா பதிப்பகம் என்ற பெயரில பஞ்சாங்கத்தை வெளியிடுகின்றனர்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ வ.செந்தில்குமார் (20 நவம்பர் 2016). "கடந்த ஆண்டு சொன்னது பலித்தது: சென்னையும், தென் மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கும் - மீண்டும் எச்சரிக்கும் ஆற்காடு பஞ்சாங்கம்". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2016.
12_112023