ஆற்று ஓங்கில்
ஆற்று ஓங்கில்கள் என்பன நன்னீரிலோ அல்லது உவர் நீரிலோ மட்டுமே வாழும் நீர்வாழ் பாலூட்டிகள் ஆகும். ஆற்று ஓங்கில்களில் இந்திய, அமேசானிய, உவர் நீர் ஓங்கில் என மூன்று குடும்பங்கள் உள்ளன.
ஆற்று ஓங்கில்கள் | |
---|---|
கங்கை ஆற்று ஓங்கில் Platanista gangetica | |
Information | |
ஆற்று ஓங்கில்களாக கருதப்படும் குடும்பங்கள் |
|
புது உலகப் பரவல் வரைபடம் | |
பழைய உலகப் பரவல் வரைபடம் | |
மற்ற ஓங்கில்களோடு ஒப்பிடுகையில் ஆற்று ஓங்கில்கள் அளவில் சிறியன. இவை 5 அடி நீளம் முதல் 8 அடி நீளம் வரை உள்ளன. பெண் ஆற்று ஓங்கில்கள் ஆண்களை விட அளவில் பெரியவையாக உள்ளன.[1][2] இவை நீரிலும் காற்றிலும் சிறந்த கேட்கும் திறன் பெற்றுள்ளன.
ஆற்று ஓங்கில்கள் உலகில் பரவலாகக் காணப்படுவதில்லை. குறிப்பிட்ட சில ஆறுகளிலும் அவற்றில் டெல்ட்டாப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. மீன்களே இவற்றின் முதன்மையான உணவாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ralls, Katherine; Mesnick, Sarah. Sexual Dimorphism (PDF). pp. 1005–1011. Archived from the original (PDF) on 2019-07-25. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
- ↑ Reidenberg, Joy S. (2007). "Anatomical adaptations of aquatic mammals". The Anatomical Record 290 (6): 507–513. doi:10.1002/ar.20541. பப்மெட்:17516440.