ஆலன் கிப்பக்சு

ஆத்திரேலிய துடுப்பாட்டக்காரர்

ஆலன் பால்கனர் கிப்பக்சு (Alan Falconer Kippax (25 மே, 1897 – 5 செப்டம்பர், 1972) ஆத்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டம் 175 முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார். வலதுகை மட்டையாளரான இவர் வலது கை சுழற் பதுவீச்சாளரான இவர் ஆத்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்சு அணிக்காக விளையாடினார். 1928 முதல் 1929 மற்றும் 1932-1933 ஆண்டுகளில் இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். தனது துடுப்பாட்ட பாங்கு மூலமாக பரவலாக அறியப்பட்டார். மத்திய கள துடுப்பாட்ட வீரரான இவர் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரு தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்களில் இவர் விளையாடியுள்ளார். மேலும் நியூ சவுத் வேல்சு அணியின் தலைவராக எட்டு ஆண்டுகள் இருந்துள்ளார்.முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் சீரான ஓட்டங்களை எடுத்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ஆலன் பால்கனர் கிப்பக்சு 25 மே, 1897 இல் ஆர்தர் பெர்சிவல் ஹோவல் கிப்பக்சு மற்றும் சோபி எஸ்டெல்லாவிர்கு மூன்றாவது மகனாக சிட்னியில் உள்ள படிங்டன் நெனும் புறநகர்ப் பகுதியில் பிறந்தார். இவர் போண்டி மற்றும் கிளீவ்லேண்ட் பொதுப் பள்ளிகளில் பயின்றார். இவருக்கு பதினான்கு வயதாக இருந்த போது வேவர்லி துடுப்பாட்ட சங்கத்தில் சேர்ந்தார். மூன்று ஆண்டுகளில் முதன்மையான அணியில் வீரரானார்.[1]

தேர்வுத் துடுப்பாட்டம்

தொகு

1925 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. மார்ச் 4 இல் சிட்னி விளையாட்டு சங்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஐந்தாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். முதல் ஆட்டப் பகுதியில் 111 பந்துகளைச் சந்தித்து 42 ஓட்டங்களை எடுத்து கில்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் பில் போன்ஸ்போர்டுடன் இணைந்து 105 ஓட்டங்களை எடுத்தார்.[2] விசுடன் நாட்குறிப்பானது இந்த இணையின் ஆட்டம் ஆத்திரேலியாவிற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது எனக் கூறியது.[3] இரண்டாவது ஆட்டப் பகுதியில் எட்டு ஓட்டங்கள் எடுத்து ஊலியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 307 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

1934 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. ஆகஸ்ட் 18 இல் ஓவல் துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஐந்தாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். முதல் ஆட்டப் பகுதியில் 49 பந்துகளைச் சந்தித்து 28 ஓட்டங்களை எடுத்து பவசு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 16 பந்துகளில் எட்டு ஓட்டங்கள் எடுத்து கிளார்க்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 562 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

1924 -25 ஆம் ஆண்டிற்கான கோடைகால தொடரில் இவர் நியூசவுத் வேல்சு அணி சார்பாக சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தில் ஆத்திரேலிய லெவன் அணிக்கு எதிரான இரு முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் முதல் போட்டியின் இரு ஆட்டப் பகுதிகளிலும் நூறு ஓட்டங்கள் அடித்தார். முதல் ஆட்டப் பகுதியில் 127 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 122 ஓட்டங்களையும் எடுத்தார். மேலும் இரண்டாவது போட்டியில் தனது முதல் இருநூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். முதல் ஆட்டப் பகுதியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 212 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 40 ஓட்டங்களையும் எடுத்தார்.

சான்றுகள்

தொகு
  1. "Our History". Eastern Suburbs Cricket Club. Archived from the original on 28 செப்டெம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2007.
  2. Whitington (1974), pp 138–39.
  3. "Australia v England 1924-25". Wisden. 1931. பார்க்கப்பட்ட நாள் 12 August 2007.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_கிப்பக்சு&oldid=4107242" இலிருந்து மீள்விக்கப்பட்டது