ஆலமுற்றம்
புகார் நன்னாட்டில் ஆலமுற்றம் என்னும் சிவன் கோயில் இருந்தது. இதன் முற்றத்தில் காவிரி ஆறு தன் நுண்மணலைக் குவித்திருந்தது. அங்குள்ள பொழிலில் மகளிர் மணல்வீடு கட்டித் தன் கையால் செய்த பாவையை அதில் கிடத்தி விளையாடிய பின்னர் அந்தப் பாவையை அங்குள்ள பொய்கைத் துறையில் விட்டுவிடுவர். இந்தக் கோயில் இருந்த ஊருக்கு ஆலமுற்றம் என்று பெயர்.
முக்கண்-செல்வன் கல்லால மரத்தடியில் இருந்து தவம் செய்தான் என்பர். ஆலம் என்னும் நஞ்சை உண்டான் என்றும் கூறுவர். இந்த ஆலம் இந்த ஊரின் பெயரோடு தொடர்புடையது எனலாம். இந்தக் கோயிலுக்கு ஓங்கி உயர்ந்த மதில் இருந்தது. மணல் குவிப்பைத் தடுக்க இந்த மதில் கட்டப்பட்டது எனலாம்.[1]
சான்று
தொகு- ↑ காவிரிப் பேர்யாற்று அயிர் கொண்டு ஈண்டி எக்கர் இட்ட குப்பை வெண்மணல் வைப்பின் யாணர் வளங்கெழு வேந்தர் ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசை நான்மறை முதுநூல் முக்கட் செல்வன் ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர் கைசெய் பாவை துறைக்கண் இறுக்கும் மகர நெற்றி வான்தோய் புரிசை – நல்லில் (கோயில்) – புகாஅர் நன்னாட்டதுவே - பரணர் - அகநானூறு 181-17