ஆலம்கிர் கபீர் (அரசியல்வாதி)
ஆலம்கிர் கபீர் (AlamgirKabir) வங்காள தேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1948 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] வங்காளதேச தேசியவாதக் கட்சி அரசியல்வாதியாகவும் நவோகான்-6 தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அறியப்படுகிறார்.[2][3] வீட்டுவசதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்களின் மாநில அமைச்சராகவும் ஆலம்கிர் கபீர் பணியாற்றியுள்ளார்.[4]
ஆலம்கீர் கபீர் AlamgirKabir | |
---|---|
State பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் | |
பதவியில் 16 மே 2006 – 29 அக்டோபர் 2006 | |
மாநில வீட்டு வசதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் | |
நாடாளுமன்ற உறுப்பினர் நாவோகாவுன்-6 | |
பதவியில் 1991–2006 | |
முன்னையவர் | முல்லா ரிசௌல் இசுலாம் |
பின்னவர் | இசுராபில் ஆலம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சனவரி 1948 |
அரசியல் கட்சி | வங்காளதேச தேசியக் கட்சி |
தொழில்
தொகுஆலம்கிர் கபீர் 1991, 1996, மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் வங்காளதேசத்தின் தேசியவாதக் கட்சி வேட்பாளராக நவோகான்-6 தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] 2007 ஆம் ஆண்டில் இயமாத்-உல்-முச்சாகிதின் வங்காளதேசம் என்ற இசுலாமிய பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவளித்ததற்காக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.[6] வங்காளதேச தேசியவாதக் கட்சியால் 11 ஆவது இயாதியா சங்கத் தேர்தலில் நவோகான் தொகுதியில் போட்டியிட பரிந்துரைக்கப்பட்டார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Guest Profile". tritiyomatra.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-28.
- ↑ "BNP, AL to resist Alamgir Kabir" (in en). The Daily Star. 27 November 2008. https://www.thedailystar.net/news-detail-65175. பார்த்த நாள்: 15 October 2019.
- ↑ "Naogaon 6 BNP candidate's motorcade attacked". Dhaka Tribune. 26 December 2018. https://www.dhakatribune.com/bangladesh/election/2018/12/26/naogaon-6-bnp-candidate-s-motorcade-attacked. பார்த்த நாள்: 15 October 2019.
- ↑ "Alamgir Kabir made state minister for women and children". bdnews24.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics". Vote Monitor Networks. Archived from the original on 29 December 2008. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.
- ↑ "Alamgir Kabir, Shamsul Alam Pramanik sued for backing JMB". bdnews24.com. https://bdnews24.com/bangladesh/2007/04/17/alamgir-kabir-shamsul-alam-pramanik-sued-for-backing-jmb. பார்த்த நாள்: 15 October 2019.
- ↑ "Election campaign gets a peak in Rajshahi". Bangladesh Sangbad Sangstha. http://www.bssnews.net/?p=140509. பார்த்த நாள்: 15 October 2019.