ஆலம்கீர் ஆலம்

இந்திய அரசியல்வாதி

ஆலம்கீர் ஆலம் (Alamgir Alam) ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக ஜார்க்கண்ட் சட்டசபைக்குட்பட்ட பாகுட் தொகுதியிலிருந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினரானவராவார். ஆலம் 2000, 2004, 2014 மற்றும் 2019 தேர்தல்களில் ஜார்கண்ட் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் இவர் 2009 தேர்தலில் தோல்வியடைந்தார். ஆலம் அக்டோபர் 20, 2006 மற்றும் டிசம்பர் 12, 2009 இடையே ஜார்க்கண்ட் சட்டமன்றத்தின் சபாநாயகராகப் பணியாற்றினார்.

ஆலம்கீர் ஆலம்
ஆய அமைச்சர், ஜார்க்கண்டு அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
29 திசம்பர் 2019
ஆளுநர்திரௌபதி முர்மு
ரமேஷ் பைஸ்
அமைச்சரவை மற்றும் துறைகள்
  • நாடாளுமன்ற விவகாரம்
  • ஊரக வளர்ச்சி
முன்னையவர்நில்கந்த் சிங் முன்டா
ஜார்க்கண்டின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்அகில் அக்தர்
தொகுதிபாகுட்
பதவியில்
2000–2009
பின்னவர்அகில் அக்தர்
தொகுதிபாகுட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபாகுட், சார்க்கண்ட்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்இராஞ்சி

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் ஆலம் அகில் அக்தர் என்பவரைத் தோற்கடித்ததன் மூலம் மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானார். அகில் அக்தர் என்பவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆலம்கீர் ஆலத்தைத் தோற்கடித்தவர் ஆவார்.[1] இந்திய தேசிய காங்கிரசு தனது கூட்டணிக் கட்சிகளான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் இராச்டிரிய ஜனதா தளம் ஆகிய பிற கட்சிகளுடன் இணைந்து வெற்றி பெற்ற நிலையினைத் தொடர்ந்து, இவர் சட்டசபை காங்கிரசு அணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]2019 ஆம் ஆண்டு திசம்பர் 29 ஆம் நாள், முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன், இராமேசுவர் ஓரான் மற்றும் சத்தியானந்த் போக்தா ஆகியோருடன் ஆய அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட முதல் நால்வருள் இவரும் ஒருவராக இருந்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலம்கீர்_ஆலம்&oldid=3612715" இலிருந்து மீள்விக்கப்பட்டது