ஆலிசு எக்கா
ஆலிசு எக்கா (Alice Ekka) இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடிப் பின்னணியில் இருந்து வந்த முதல் ஆதிவாசிப் பெண் கதைசொல்லியாக அறியப்படுகிறார். ஓர் எழுத்தாளராகவும் ஆலிசு எக்கா அறியப்படுகிறார்.[1] [2] [3]
ராஞ்சியில் 1917 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று முண்டா சமூகத்தில் எக்கா பிறந்தார்.[1] 1938 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள இசுகாட்டிசு தேவாலயக் கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற சார்க்கண்டின் முதல் பழங்குடிப் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார்.
1950, 1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் இவர் இந்தி மொழியில் கதைகளை எழுதினார். [1] இவரது கதைகளின் தொகுப்பு, ஆலிசு எக்கா கி ககானியன் வெளிவந்தது, வந்தனா டெட்டே என்பவரால் இது திருத்தப்பட்டது, (ராதாகிருஷ்ண பிரகாசன்,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8183617918 ) இவரது மரணத்திற்குப் பின் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது
1960 ஆம் ஆண்டுகளில் இவரது கதைகள் ஆதிவாசி பத்ரிகா என்ற வார இதழில் வெளிவந்தன. [4]
இவர் "இந்தியாவின் முதல் பெண் பழங்குடியினக் கதைசொல்லி" என்று வர்ணிக்கப்படுகிறார். இவரது பிறந்தநாளின் நூற்றாண்டு விழா சொந்த ஊரான ராஞ்சியில் "அனைத்திந்திய பழங்குடியினப் பெண்கள் எழுத்தாளர் சந்திப்பு" என்ற பெயரில் இரண்டு நாள் மாநாடாக கொண்டாடப்பட்டது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Our Pioneers: Alice Ekka". Pyara Kerketta Foundation. Archived from the original on 21 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 November 2018.
- ↑ 2.0 2.1 "All India Tribal Women Writer's Meet begins in Ranchi". http://jharkhandstatenews.com/article/grapevine/36/all-india-tribal-women-writer-s-meet-begins-in-ranchi/. பார்த்த நாள்: 20 November 2018.
- ↑ "Alice Ekka story collection unveiled". https://www.dailypioneer.com/2015/state-editions/alice-ekka-story-collection-unveiled.html. பார்த்த நாள்: 20 November 2018.
- ↑ Poyam, Akash. "Ten voices from Adivasi literature". The Caravan (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-29.