ஆல்ஃபெல்டைட்டு
செலீனைட்டு கனிமம்
ஆல்ஃபெல்டைட்டு (Ahlfeldite) என்பது ((Ni, Co)SeO3]·2H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் இரண்டாம் நிலை தோற்ற கனிமமாக இது கருதப்படுகிறது. 1892–1982 காலத்தில் வாழ்ந்த செருமன்-பொலிவியன் சுரங்கப் பொறியியலாளரும் புவியியலருமான பிரடெரிக் ஆல்ஃபெல்ட்டு கண்டுபிடித்ததன் காரணமாக கனிமத்திற்கு ஆல்ஃபெல்டைட்டு எனப் பெயரிடப்பட்டது. பொலிவியா நாட்டிலுள்ள விர்ச்சென் டி சுருமி சுரங்கம், பகாயேக்கு கனியன், சாயந்தா மாகாணம், பொட்டோசி துறை ஆகிய பகுதிகளில் இது கிடைக்கிறது.
ஆல்ஃபெல்டைட்டு Ahlfeldite | |
---|---|
ஆல்பிரட்பெட்ரோவைட்டு, ஆல்ஃபெல்டைட்டு, சால்கோமெனைட்டு | |
பொதுவானாவை | |
வகை | செலீனைட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | (Ni,Co)SeO3·2H2O |
இனங்காணல் | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
மேற்கோள்கள் | [1][2][3] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஆல்ஃபெல்டைட்டு கனிமத்தை Afe[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Webmineral.com - Ahlfeldite".
- ↑ "Mindat.org - Ahlfeldite".
- ↑ "Handbook of Mineralogy - Ahlfeldite" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-01-26.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.