ஆல்ககாலேட்டு
ஆல்ககாலேட்டு (Alcoholate) என்பது ஓர் உப்பின் படிக வடிவத்தைக் குறிக்கிறது. [SnCl3(OC2H5)•C2H5OH]2[1] மற்றும் C8H6N4O5•CH3OH[2]. சேர்மங்களில் உள்ளது போல படிகநீருக்குப் பதிலாக ஆல்ககால் இடம் பிடித்திருந்தால் அச்சேர்மம் ஓர் ஆல்ககாலேட்டு எனப்படுகிறது.
ஆல்ககாலேட்டு என்ற சொல்லின் இரண்டாவது பொருள் ஒரு கசாயம் அல்லது தாவரப் பொருட்களின் ஆல்ககால் கரைசல் என்பதாகும்.
ஆல்காக்சைடு என்ற சொல்லுக்குரிய இணைபொருட்சொல் என்பது ஆல்ககாலேட்டு என்பதன் மூன்றாவது பொருளாகும். ஓர் ஆல்ககாலில் உள்ள ஐதராக்சில் குழுவுக்குப் பதிலாக, ஓர் ஐதரசன் அணு உலோக அணுவின் உதவியால் பதிலீடு செய்யப்பட்டு பெறப்படும் வழிப்பெறுதியே ஆல்காக்சைடு என்பதாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Webster, M., & Collins, P. H. (1974). The crystal and molecular structure of trichloroethoxytin (IV) ethanolate dimer,[SnCl3(OC2H5)•C2H5OH]2. Inorganica Chimica Acta, 9, 157-160.
- ↑ Cherukuvada, S., Babu, N. J., & Nangia, A. (2011). Nitrofurantoin–p‐aminobenzoic acid cocrystal: Hydration stability and dissolution rate studies. Journal of pharmaceutical sciences, 100(8), 3233-3244.