ஆல்காக்சிலேற்றம்

ஆல்காக்சிலேற்றம் (Alkoxylation) என்பது ஓர் ஈபாக்சைடை மற்றொரு சேர்மத்துடன் சேர்க்கின்ற வேதி வினையாகும். ஆல்ககால்களை ஈதாக்சிலேற்றம் செய்வதையே வழக்கமாக நிகழ்கின்ற இவ்வினை வெளிப்படுத்துகிறது. எத்திலீன் ஆக்சைடு இவ்வினையில் ஆல்காக்சிலேற்றும் முகவராக செயல்படுகிறது.

ROH + C2H4O → ROCH2CH2OH

புரோப்பைலீன் ஆக்சைடும் (PO, OCH2CHCH3) தொழில்முறை முக்கியத்துவம் பெற்ற மற்றொரு ஈபாக்சைடு ஆகும். இது ஆல்காக்சிலேற்றம் மூலம் பாலியீத்தர் பாலியால்களை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆல்காக்சிலேற்றச் செயல்முறையின் எளியவடிவம் கீழே தரப்பட்டுள்ளது.

ROH + n OCH2CHCH3 → R(OCH2CHCH3)nOH

இம்முறையில் உருவாகும் பாலியால்கள் சிக்கலான முப்பரிமாண அமைப்புகளைக் கொண்டு புரோப்பைலீன் ஆக்சைடிற்கு சமச்சீரின்மையைத் தருகின்றன. பாலியால்களை டையசோசயனேட்டுகளுடன் சேர்த்து குறுக்கவினைக்கு உட்படுத்தி பாலியுரித்தேன்களைத் பெருமளவில் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள் [1].

மேற்கோள்கள்

தொகு
  1. Norbert Adam et al. "Polyurethanes" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a21_665.pub2
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்காக்சிலேற்றம்&oldid=2447916" இலிருந்து மீள்விக்கப்பட்டது