ஆல்கீனைல் பெராக்சைடு

ஆல்கீனைல் பெராக்சைடுகள் (Alkenyl peroxides) என்பவை பெராக்சைடு தொகுதியுடன் நேரடியாக ஓர் எச்சம் போல ஆல்கீன் தொகுதி இணைந்திருக்கும் வேதிச் சேர்மங்களைக் குறிக்கும். பலவீனமான O-O பிணைப்புகளைப் பெற்றுள்ள இச்சேர்மங்கள் பொதுவாக நிலைப்புத் தன்மையற்றவைகளாக உள்ளன.

ஆல்கீனைல் பெராக்சைடின் பொதுக் கட்டமைப்பு

பண்புகள்

தொகு

ஆல்கீனைல் பெராக்சைடுகள் எளிதாக O-O பிணைப்புகள் சமபிளவு அடைவதன் மூலம் சிதைவடைந்து இரண்டு தனி உறுப்புகளாகின்றன. ஆக்சைல் தனி உறுப்பு மற்றும் ஆல்கீனைலாக்சைல் தனி உறுப்பு அல்லது α- ஆக்சோ-ஆல்கைல் தனி உறுப்பு என்பவை அவ்விரண்டு தனி உறுப்புகளாகும்.

 
Decomposition of alkenyl peroxides by homolytic cleavage of the O-O bond

முறையே ஒத்திசைவு நிலைபெற்ற ஆல்கினைலாக்சைல் தனி உறுப்பும், வலிமையான கார்பனைல் பிணைப்பும் உருவாகின்ற காரணத்தாலேயே O-O பிணைப்பு பலவீனமான பிணைப்பாகக் காணப்படுகிறது [1]. அரைல் பெராக்சைடுகளுக்கும் இதே காரணம் பொருந்தும் என அறியப்படுகிறது. இவ்விருவகை சேர்மங்களும் பிற பெராக்சைடுகளுடன் ஒப்பிடுகையில் பலவீனமான O-O பிணைப்புகளையே கொண்டுள்ளன. இப்பிணைப்புகள் இருப்பதை முன்னிட்டே ஆல்கீனைல் பெராக்சைடுகள் பொதுவாக வினைத்திற இடைநிலைப் பொருள்கள் எனப்படுகின்றன [1][2]. சில பல்லின அரைல்பெராக்சைடுகள் விதிவிலக்காக அதிக நிலைப்புத்தன்மையுடன் விவரித்து அடையாளப்படுத்தக் கூடிய வகையில் காணப்படுகின்றன [3].

தோற்றம்

தொகு

வளிமண்டலத்தில்

தொகு

வளிமண்டல வேதியியலில் ஆல்கீனைல் ஐதரோபெராக்சைடுகள் வினைத்திறன் மிக்க இடைநிலைகள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது [4][5][6]. வளிமண்டலத்திலுள்ள ஆல்க்கீன்கள் ஓசோனாற்பகுப்பு வினையின் மூலம் ஆல்கீனைல் ஐதரோபெராக்சைடுகள் உருவாகின்றன. மேலும் ஐதராக்சைடு தனிஉறுப்புகள் சிதைவினாலும் இவை உருவாகின்றன. காற்றிலுள்ள மாசுக்களை சிதைப்பதில் இவை முக்கியப்பங்கு வகிக்கின்றன. பகற்பொழுதில் ஒளியுடன் ஒளிவேதிம கதிரியக்க வினையின் வழியாக ஐதராக்சில் தனி உறுப்புகள் உருவாகின்றன. இரவுப்பொழுதில் பிரதான மூலமாகக் கருதப்படும் ஆல்கீனைல் பெராக்சைடுகள் வழியாகவே ஐதராக்சில் தனி உறுப்புகள் உருவாகின்றன [4].

கரைசல்களில்

தொகு

கீட்டோன்களை ஐதரோபெராக்சைடுகள் அல்லது ஐதரசன் பெராக்சைடுகளுடன் சேர்த்து அமில வினையூக்க ஆவி ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதால் ஆல்கீனைல் பெராக்சைடுகள் உருவாகின்றன. தொடர்புடைய சிதைவு விளைபொருட்களின் பண்புரு விளக்கத்தின் அடிப்படையில் இவை பரிந்துரைக்கப்படுகின்றன [2]. ஐதரசன் பெராக்சைடைப் பயன்படுத்தி நிகழும் பேயர்-வில்லிகெர் ஆக்சிசனேற்ற வினையில், வினையின் செயல்திறனை குறைக்கும் அவசியமற்ற உடன் விளைபொருளாகவும் ஆல்கீனைல் பெராக்சைடுகள் தோன்றுகின்றன [2].

பயன்பாடுகள்

தொகு

ஆல்கீனைல் பெராக்சைடுகளிலிருந்து உருவாகும் தனி உறுப்புகளை கரிம தனி உறுப்பு வினைகளில் பயன்படுத்த முடியும். உதாரணமாக, ஐதரசன் அணுவைப் பிரித்தெடுக்கும் வினைகளில் நடுநிலையுடன் செயல்பட்டு C-H பிணைப்புகளை [7] செயல்சார்பு நிலைக்கு மாற்றுகின்றன. அல்லது ஆல்கீன்களுடன் ஆல்கீனைலாக்சில் தனி உறுப்பு சேர்த்து கீட்டோன் எச்சங்களை அறிமுகப்படுத்துகின்றன [8][9][10].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 N. Sebbar, J. W. Bozzelli, H. Bockhorn, J. Phys. Chem. A 2004, 108, 8353–8366.எஆசு:10.1021/jp031067m
  2. 2.0 2.1 2.2 B. Schweitzer-Chaput, T. Kurtén, M. Klussmann, Angew. Chem. Int. Ed. 2015, 54, 11848–11851.எஆசு:10.1002/anie.201505648
  3. H. Kropf, M. Ball, Liebigs Ann. Chem. 1976, 2331–2338.
  4. 4.0 4.1 R. Atkinson, J. Arey, Atmospheric Environment 2003, 37, Supplement 2, 197-219.எஆசு:10.1016/S1352-2310(03)00391-1
  5. L. Vereecken, J. S. Francisco, Chem. Soc. Rev. 2012, 41, 6259–6293, எஆசு:10.1039/C2CS35070J.
  6. R. Gutbrod, R. N. Schindler, E. Kraka, D. Cremer, Chem. Phys. Lett. 1996, 252, 221–229,எஆசு:10.1016/0009-2614(96)00126-1.
  7. M. Klussmann, B. Schweitzer-Chaput, Synlett 2016, 27, 190-202.எஆசு:10.1055/s-0035-1560706
  8. B. Schweitzer-Chaput, J. Demaerel, H. Engler, M. Klussmann, Angew. Chem. Int. Ed. 2014, 53, 8737-8740, எஆசு:10.1002/anie.201401062.
  9. E. Boess, S. Karanestora, A.-E. Bosnidou, B. Schweitzer-Chaput, M. Hasenbeck, M. Klussmann, Synlett 2015, 26, 1973-1976.எஆசு:10.1055/s-0034-1381052
  10. X.-F. Xia, S.-L. Zhu, M. Zeng, Z. Gu, H. Wang, W. Li, Tetrahedron 2015, 71, 6099–6103, எஆசு:10.1016/j.tet.2015.06.106.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்கீனைல்_பெராக்சைடு&oldid=2524695" இலிருந்து மீள்விக்கப்பட்டது