ஆல்கைன் சிப்பர் வினை
ஆல்கைன் சிப்பர் வினை (Alkyne zipper reaction) என்பது ஒரு கரிமச் சேர்மத்தின் உட்புற ஆல்க்கைனைக் விளிம்புநிலை ஆல்க்கைனாக மாற்றியமாக்குகின்ற வினையாகும். சார்லசு ஆலன் பிரௌன் மற்றும் அயோகா யமாசிட்டா என்பவர்கள் 1975 இல் முதன்முதலாக இவ்வினையை கண்டறிந்தனர்[1]. நேர்-சங்கிலி ஆல்கைன்களுக்காகவும் அசிட்டிலினிக் ஆல்ககால்களுக்காகவும் இவ்வினை நிகழ்கிறது. மேலும், நீண்ட-சங்கிலி ஐதரோகார்பன்களில் தொலை செயல்பாட்டு சேர்க்கைக்கான ஒரு பயனுள்ள அணுகுமுறையையும் வழங்குகிறது[2].
ஆல்கைன் சிப்பர் வினை நிகழ்வதற்கு ஒரு வலிமையான காரம் அவசியமாகும். பிரௌனும் யமாசிட்டாவும் பொட்டாசியம் ஐதரைடை 1,3-டையமினோபுரோப்பேன் கரைப்பானுடன் சேர்த்து வினைத் தளத்தில் உருவாக்கப்பட்ட 1,3-டையமினோபுரோப்பேனைடைப் பயன்படுத்தினர்[1]. பொட்டாசியம் ஐதரைடின் அதிக விலையும் தீங்கிழைக்கும் தன்மையும் மாற்று வழிமுறையை தேட வைத்தன. எத்திலீன்டையமீன், 1,3-டையமினோபுரோப்பேனுக்கு சரியான மாற்றாக இருக்கவில்லை. உதாரணமாக, 9-டெசைன்–1- ஆலை 2-டெசைன்–1- ஆலிலிருந்து மாற்றியமாக்கும் வினையைக் கூறலாம். பொட்டாசியம் மூவிணைய பியூட்டாக்சைடு முன்னிலையில் 1,3-டையமினோபுரோப்பேனின் இலித்தியம் உப்பு தோராயமாக 85% 9-டெசைன்–1- ஆலைத் தருகிறது[2]
- HO–CH2C≡C–(CH2)6CH3 → HO(CH2)8–C≡CH.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 C. A. Brown and A. Yamashita (1975). "Saline hydrides and superbases in organic reactions. IX. Acetylene zipper. Exceptionally facile contrathermodynamic multipositional isomeriazation of alkynes with potassium 3-aminopropylamide". J. Am. Chem. Soc. 97 (4): 891–892. doi:10.1021/ja00837a034.
- ↑ 2.0 2.1 Suzanne R. Abrams and Angela C. Shaw (1988). "Triple Bond Isomerizations: 2- to 9-decyn-1-ol". Organic Syntheses 66: 127. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv8p0146.; Collective Volume, vol. 8, p. 146