ஆல்பர்டோ மொராவியா
ஆல்பர்டோ மொராவியா (Alberto Moravia நவம்பர் 28, 1907—செப்டம்பர் 26, 1990) என்பவர் இத்தாலிய நாட்டின் புதின ஆசிரியர், எழுத்தாளர், இதழாளர் ஆவார். இவருடைய புதினங்கள் இவர் காலத்துச் சமுதாய பாலியல் நிலை, சமூக அவலங்கள், இருத்தலியம் ஆகியன குறித்து வெளிப்படுத்தின.[1]
ஆல்பர்டோ மொராவியா Alberto Moravia | |
---|---|
பிறப்பு | 28 நவம்பர் 1907 உரோம் |
இறப்பு | 26 செப்டெம்பர் 1990 (அகவை 82) உரோம் |
கல்லறை | Campo Verano |
பணி | எழுத்தாளர் |
சிறப்புப் பணிகள் | Gli indifferenti, Il conformista, Racconti romani |
பாணி | புதினம் |
வாழ்க்கைத் துணை/கள் | Elsa Morante, Carmen Llera |
குடும்பம் | Adriana Pincherle |
விருதுகள் | Marzotto Prize, Viareggio-Versilia International Prize |
இளமைக் காலம்
தொகுஆல்பர்டோ பிஞ்சர்லே என்பது இவரது இயற்பெயர். மொராவியா என்ற தம் பாட்டியின் பெயரை புனைபெயராக இணைத்து வைத்துக் கொண்டார். இவர் சிறுவராய் இருந்தபோது எலும்புருக்கி நோயினால் அவதியுற்று ஐந்து ஆண்டுகள் படுக்கையில் இருந்தார். அதனால் வீட்டில் இருந்துகொண்டே படித்தார். இத்தாலி மட்டுமல்லாமல் செருமன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் பயின்றார்.
எழுத்தாக்கம்
தொகுஆல்பர்டோ மொராவியாவின் எழுத்துப் படைப்புகள் பாசிச எதிர்ப்பைக் கொண்டு இருந்தன. உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சிக்கல்களையும் அவர்கள் அடைந்த துன்பங்களையும் சித்தரித்தன. அன்பு இல்லாத காமம், சமூகக் கேடுகள் போன்றவற்றை எதிர்த்து இவர் எழுதினார். சில செய்தி இதழ்களில் இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளையும் எழுதினார். இவருடைய படைப்புகள் 27 மொழிகளில் ஆக்கம் பெற்று வெளி வந்தன. நியூ ஆர்க்குமெண்ட்ஸ் என்னும் பெயரில் ஓர் இலக்கிய இதழைத் தொடங்கினார். சில வார இதழ்களில் திரைப்படங்கள் பற்றிய திறனாய்வுகளையும் எழுதி வந்தார்.
பரிசுகளும் பட்டமும்
தொகு1940-50 ஆண்டுகளில் இவர் எழுதிய புதினங்கள் ஒரு பில்லியன் படிகள் அளவுக்கு விற்பனை ஆகின. எம்ப்டி கான்வாஸ் என்ற இவரது புதினம் விராக்கியோ பரிசைப் பெற்றது. இக்கதை திரைப்படமாகவும் உருவானது. ஐரோப்பிய ஆளுமை என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது. மொராவியா 1959 முதல் 1962 வரை பென் இண்டர்நேசனல் என்னும் பன்னாட்டு எழுத்தாளர்கள் அமைப்பில் தலைவராக இருந்தார்.