ஆல்பர்ட் புஜிமோரி

ஆல்பர்டோ புஜிமோரி ( Alberto Kenya Fujimori ) (26 சூலை 1938 – 11 செப்டம்பர் 2024)என்பவர் பெரு நாட்டின் அரசுத் தலைவராக இருந்தவர். இவருடைய பெற்றோர் சப்பான் நாட்டிலிருந்து பெருவுக்குக் குடியேறியவர்கள்.1 990 முதல் 2000-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த புஜிமோரி மீது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.[1][2] சிறையில் இருந்த அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தலைநகர் லிமாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2008 இல் இவர் மீது குற்ற விசாரணை நிகழும்போது பெரு மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் இவரது தலைமையை ஆதரித்துக் குரல் வாக்குகள் போட்டார்கள்.[3]

இறப்பு

தொகு

இவர் 9 செப்டம்பர் 2024 அன்று சுவாசிப்பதில் சிரமத்தைக் கொண்டிருந்தார். 10 செப்டம்பர் அன்று தனது சுயநினைவை இழந்தார். தனது நாக்கில் ஏற்பட்ட புற்றுநோயின் கடுமையான விளைவுகளால் செப்டம்பர் 11 ஆம் நாள் இறந்தார்.[4] பெரு அரசாங்கம் மூன்று நாள் துக்கம் அறிவித்தது.[4] இவருக்கு அரச மரியாதையுடனான இறுதிச் சடங்கிற்கு அனுமதி அளித்தது. [4]

மேற்கோள்

தொகு
  1. Jo-Marie Burt. 2006 "Quien habla es terrorista": the political use of fear in Fujimori's Peru. Latin American Research Review 41(3):32–61
  2. "Mass sterilization scandal shocks Peru". BBC News. 24 July 2002. http://news.bbc.co.uk/1/hi/world/americas/2148793.stm. பார்த்த நாள்: 30 April 2006. 
  3. "Peru court sentences Fujimori to 25 years in prison for 'dirty war'". CBC News. 7 April 2009. http://www.cbc.ca/world/story/2009/04/07/peru-fujimori-convict-murder007.html. 
  4. 4.0 4.1 4.2 "Former Peruvian leader Alberto Fujimori dies at 86" (in ஆங்கிலம்). BBC. 12 September 2024. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பர்ட்_புஜிமோரி&oldid=4090391" இலிருந்து மீள்விக்கப்பட்டது