ஆல்பெர்ட் பதக்கம்

ஆல்பெர்ட் பதக்கம் (Albert Medal (Royal Society of Arts) 18 ஆண்டுகளாக கழகத்தின் தலைவராக இருந்த இளவரசர் ஆல்பர்ட் நினைவாக 1864 ஆம் ஆண்டில் அரசு கலைக் கழகம் ஆல்பெர்ட் பதக்கத்தை நிறுவியது.[1] இது முதன்முதலில் 1864 ஆம் ஆண்டில் " கலையஆக்கம் வணிகத்தை மேம்படுத்துவதில் தனித் தகுதிக்காக " வழங்கப்பட்டது. இந்த பதக்கத்தை வழங்குவதில் , சமூகத்தின் பரந்த நிகழ்ச்சி நிரலுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் , முன்னேற்றத்தை வழிநடத்தும், சமகால சமூகத்திற்குள் நேர்முக மாற்றத்தை உருவாக்கும் தனிநபர் அமைப்புகள், குழுக்களை கழகம் இப்போது மதித்து ஏற்கிறது.

ஆல்பெர்ட் பதக்கம் வழி , உலகின் சில சிக்கலான பிரச்சினைகளைச் சமாளிக்க உழைப்பவர்களின் படைப்பாற்றல், புதுமைகளை கழகம் மதித்து ஏற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசு கலைக் கழகம் , கழகத்தின் திட்டத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள், பாடங்களை பரிந்துரைக்க கழகத்தின் ஆய்வுநல்கை கேட்டு பிரச்சினைகளை அடையாளம் காட்டுகிறது. இந்த முன்மொழிவுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு , அறங்காவலர்களுக்கும் மன்றத்துக்கும் பரிந்துரைகள் செய்யப்படுகின்றன , அவர்களே தகுதியான பெறுநர்களை பரிந்துரைக்கவும் கேட்கப்படும் ஆய்வுநல்கையைத் தேர்ந்தெடுப்பதற்கும் பொறுப்பானவர்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. "The Albert Medal". Royal Society of Arts, London, UK. Archived from the original on 8 June 2011. பார்க்கப்பட்ட நாள் 9 March 2011.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பெர்ட்_பதக்கம்&oldid=3956661" இலிருந்து மீள்விக்கப்பட்டது