ஆழ்வார்தோப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
ஆழ்வார் தோப்பு
தொகுதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அருகில் சுற்றிலும் மரங்கள் சூழ உள்ள அழகான கிராமம்.
ஆழ்வார்தோப்பின் மகத்துவம்
தொகுஆழ்வார்தோப்பு வரலாறு :- ஆழ்வார்தோப்பு என்ற பெயர் இடப்பட்ட பெயர் அல்ல. தானாகவே அமைந்த பெயராகும். பன்னிரெண்டு ஆழ்வார்களில் முதன்மையான ஆழ்வாரான சுவாமி நம்மாழ்வார், பெருமாளின் அம்சமாகத் தோன்றியவர். ஸ்ரீவைகுண்டத்திலிருந்து ஏரல் வரையான பகுதி திருவழுதி நாடு என அழைக்கப்பட்டது. அதனை காரிமாறன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு திருமணமானது நாகர்கோவிலுக்கு வடக்கை உள்ள திருவேன்பதிசாரம் என்ற ஊரிலாகும். இப்போது திருப்பதிசாரம் என்று அழைக்கபடுகிறது. காரிமாறன் தம்பதியினருக்கு அவர்தம் அருள்தவத்தால் சடகோபன் என்ற நம்மாழ்வார் அவதரித்தார். அவரது காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு என ஆராய்ச்சியாளர் கணிக்கின்றனர். தமது தாய் ஊரான திருப்பதிசாரத்தில் அவதரித்த நம்மாழ்வார் தனது தந்தை ஊரான திருவழுதி நாட்டில் வளர்ந்து வந்தார். தான் பிறந்த பயனான ஆதினாதபெருமானை அடையும் நோக்கில் திருக்குருகூர் என அன்று அழைக்கப்பட்ட தற்போதைய ஆழ்வார்திருநகரிக்கு செல்லும் வழியில் ஆற்றின் வடபகுதியில் இருந்த தோப்பில் நம்மாழ்வார் தங்கி சென்றனர். அன்று முதல் இந்தப் பகுதி ஆழ்வார்தோப்பு என அழைக்கப்பட்டது. அதாவது 1,200 ஆண்டுகளாக இப்பகுதி இப்பெயருடன் வழங்கி வருகிறது. அதே காலகட்டத்தில் திருக்குருகூர் ஆழ்வார்திருநகரி எனப் பெயர் மாற்றம் பெற்றது. ஆக 1200 ஆண்டு பழமையான வரலாறு ஆழ்வார்தோப்புக்கு உண்டு.
சித்தர்கள் இருப்பிடம்
தொகுகரூர் சித்தரால் வணங்கபட்ட சிவ லிங்கம்,
திருச்செந்தூர் கோவில் கட்டிய ஞான தேசிக மூர்த்தி ஸ்வாமிகளின் சமாதி,
1000.. வருடங்கள் பழமையான {காந்திஸ்வரம்} சிவன் கோயில், எட்டு சித்தர்கள் தவம்செய்த விலாங்காய்மரங்கள், எட்டு சித்தர்கள் வழிபட்ட லிங்கம் ராமர் காலடி பாதம் பதித்த பழமையான கல்வெட்டு இப்படி பல சிறப்புகளை கோண்டது ஆழ்வார்தோப்பு
இராமசுவாமி திருகோயில்
தொகுஆழ்வார் தோப்பு நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட இராமசுவாமி திருகோயில். ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி வெள்ளி கிழமை கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெரும். இந்த திருவிழாவை காண அனைத்து ஆழ்வார்தோப்பு வெளியூர்வாசிகளும் குடும்பத்தாருடன் வந்து இந்த திருவிழாவை தவறாமல் கண்டுகளித்து எம்பெருமான் ராமனின் அருளை பெற்று செல்வார்கள்.