ஆழ்வார் பாலசுப்பிரமணியம்

தமிழ்நாட்டு கலைஞர்

"பாலா" என்று அழைக்கப்படும் ஆழ்வார் பாலசுப்ரமணியம் (Alwar Balasubramaniam) என்பவர் சிற்பம், ஓவியம், அச்சிடுதல் போன்ற பல்வேறு ஊடகங்களில் பணிபுரியும் ஒரு இந்தியக் கலைஞர் ஆவார். இவர் 1971 இல் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டில் பிறந்தார். இவரது கலைப் பணிகள் பன்னாட்டளவில் பாராட்டப்பட்டது. மேலும் இவரது படைப்புகள் உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கண்காட்சிகளில் இடம்பெற்றுள்ளது.

பாலாவின் இளமைப் பருவத்திலிருந்தே கலையின் மீதான ஆர்வம் உயிர்ப்போடு இருந்து வந்துள்ளது. இவர் 1995 இல் சென்னை ஓவியக் கல்லூரியில் பி.பி.எப் பட்டம் பெற்றார். இவர் அச்சு தயாரிப்பில் கவனம் செலுத்தி முறையான தனது பயிற்சியைத் தொடங்கினார் மற்றும் எடின்பர்க் பிரிண்டர்ஸ் பயிற்சிப்பட்டறையில் (EPW), [1] யுனிவர்சிட்டட் ஃபார் ஏஞ்சேவாண்ட்டே குன்ஸ்ட் வீன், வியன்னாவில் தனது பட்டப்படிப்புக்குப் பிறகு படிப்பைத் தொடர்ந்தார். மாசசூசெட்ஸில் உள்ள மெக்டொவல் காலனி வசிப்பிடத்திற்குப் பிறகு அவரது பணியில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. 2000 களின் முற்பகுதியில் இவர் சிற்பம் மற்றும் நிறுவலில் அதிக அளவில் வேலை செய்தார். பின்னர் ஒரு சிற்பியாக அதிக அங்கீகாரம் பெற்றார்.

அமெரிக்காவில் பாலாவின் முதல் தனிக் கண்காட்சி 2002இல் நியூயார்க் நகரில் உள்ள தல்வார் கேலரியில் நடந்தது. காட்சிக்கு இவரால் வார்க்கப்பட்ட சிற்பங்கள், மோனோபிரிண்டுகள் போன்றவை இருந்தன. பாலாவின் படைப்புகள் உணர்வின் கேள்வியுடன் தொடங்கி, நாம் முன்பு அறிந்ததைப் பற்றிய புதிய புரிதலுடன் முடிவடைகிறது. இவர் தனது தொழில் வாழ்க்கை முழுவதும் நியூயார்க் மற்றும் புது தில்லியில் உள்ள தல்வார் கேலரியில் தனது படைப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

வாசிங்டன், டி. சி. இல் உள்ள பிலிப்ஸ் சேகரிப்பகத்தில் [2] [3] நடந்த கண்காட்சிக்காக, பாலா வெளியில் வைக்க ஒரு பெரிய எஃகு சிற்பத்தை உருவாக்கினார். இது திடமானதாக இல்லாமல், மரத்தின் தண்டு அல்லது மனித இதயத்தையே குறிக்கும் ஒரு படிமத்தை உருவாக்கும் நுட்பமான பற்றவைக்கப்பட்ட எஃகு துண்டுகளால் ஆனது. நியூயார்க்கில் உள்ள குகன்ஹெய்ம் அருங்காட்சியகத்தின் 50 வது ஆண்டுவிழா, [4] மற்றும் 2010-2011 இல் நியூயார்க்கில் உள்ள நவீன கலை அருங்காட்சியகத்தில் ஆன் லைன் போன்ற குறிப்பிடத்தக்க குழு கண்காட்சிகளிலும் பாலாவின் படைப்புகள் இடம்பெற்றன. [5] மிகவும் மதிக்கப்படும் இந்த அருங்காட்சியகங்கள், உலகெங்கிலும் உள்ள கலைஞர்களை அழைத்தன, அவர்கள் தங்கள் புதுமை மற்றும் மாற்றும் கலைப்படைப்புகளுக்கு பெயர் பெற்றனர்.

பாலாவின் படைப்புகள் உலகளவில் அருங்காட்சியகங்கள், கலை விழாக்கள் மற்றும் காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் யப்பானின் மோரி கலை அருங்காட்சியகம் அடங்கும். [6]

குறிப்புகள்

தொகு
  1. "Edinburgh Printmakers". Edinburgh Printmakers (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.
  2. "Alwar Balasubramaniam - Exhibitions - Talwar Gallery". www.talwargallery.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-26.
  3. "A. Balasubramaniam". www.phillipscollection.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.
  4. "Contemplating the Void: Interventions in the Guggenheim Museum". Guggenheim (in அமெரிக்க ஆங்கிலம்). 2010-04-27. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.
  5. "On Line: Drawing Through the Twentieth Century". The Museum of Modern Art (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.
  6. "MORI ART MUSEUM [Chalo! India]". www.mori.art.museum. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.