ஆவ்தோர்ன் விளைவு
ஆவ்தோர்ன் விளைவு (Hawthorne effect) என்பது நாம் செய்யும் செயல் உற்றுநோக்கப்படுகிறது என்பதை அறிந்த பின்னர் நம்முடைய செயல் திறனை அல்லது துலங்களை சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளும் வினையைக் குறிக்கிறது [1][2]. இதை பார்வையாளர் விளைவு என்ற பெயராலும் அழைக்கலாம் [3][4]) குறிப்பாக மாறிலிகளுக்கிடையிலான உறவுகள் தொடர்பான ஆய்வின் ஒற்றுமையை இது வலிமையற்றதாக்குகிறது [5].
அமெரிக்காவின் இலினோயிசு மாநிலத்திலுள்ள துணைநகரமான சியாரோவின் ஆவ்தோர்ன் தொழிற்சாலையில் பணியாளர்களின் தேவைகள் மீது கவனம் செலுத்தினால் உற்பத்தி அதிகமாகும் என்று எல்டன் மேயோ மற்றும் பலரால் ஆய்வின் முடிவாக விளக்கப்பட்டது. ஒளியூட்ட மாற்றம் வேலை நேரம், இடைவேளை நேரம் போன்ற வேலைக் கட்டமைப்பில் மாற்றம் உள்ளிட்ட மாற்றங்கள் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
லாண்ட்சுபெர்கர் கொடுத்ததைப் போன்ற பிற்கால பொருள் விளக்கங்கள் புதுமையும் அவற்றில் இருந்து அதிகரித்த கவனமும் தொழிலாளர்களின் உற்பத்தித்திறனில் தற்காலிக அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று பரிந்துரைத்தன. இந்த விளக்கம் ஆவ்தோர்ன் விளைவு என்று அழைக்கப்பட்டது. இது புதுமை / இடையூறு விளைவு என குறிப்பிடப்படும் ஒரு நிகழ்வை ஒத்ததாகும் [6].
வரலாறு
தொகுஆவ்தோர்ன் விளைவு என்ற சொற்றொடர் என்றி ஏ லேண்ட்சுபெர்கெர் என்பவரால் உருவாக்கப்பட்டது. 1924-1932 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆவ்தோர்ன் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளை பகுப்பாய்வு செய்யும்போது இந்த சொற்றொடரை இவர் கட்டமைத்தார், ஆவ்தோர்ன் தொழிற்சாலை அதன் தொழிலாளர்கள் அதிகமான ஒளியில் உற்பத்தி அதிகமாக செய்கிறார்களா அல்லது குறைந்த அளவிலான ஒளியில் அதிக உற்பத்தி செய்கிறார்களா என்பதைப் பார்க்க ஒரு ஆய்வுக்குழுவை நியமித்திருந்தது. மாற்றங்கள் செய்யப்படும்போது தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் மேம்படுவதாகத் தோன்றி மேலும் ஆய்வு முடிந்ததும் சரிந்தது. பணியில் ஈடுபடும் போது பணியாளர்களுக்கு ஊக்கமளித்தால் செய்யும் பணியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள் [7].
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Hawthorne Effect: a randomised, controlled trial". BMC Med Res Methodol 7: 30. 2007. doi:10.1186/1471-2288-7-30. பப்மெட்:17608932.
- ↑ "Clinical estimation of fetal weight and the Hawthorne effect". Eur. J. Obstet. Gynecol. Reprod. Biol. 141 (2): 111–4. 2008. doi:10.1016/j.ejogrb.2008.07.023. பப்மெட்:18771841.
- ↑ "Benefits of 'Observer Effects': Lessons from the Field". Qualitative Research 10 (3): 357–376. June 10, 2010. doi:10.1177/1468794110362874. பப்மெட்:21297880.
- ↑ "Hawthorne Effect | What is Hawthorne Effect? - MBA Learner" (in en-US). MBA Learner. 2018-02-22 இம் மூலத்தில் இருந்து 2018-02-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180226040637/https://mbalearner.com/hawthorne-effect/.
- ↑ Salkind, Neil (2010). Encyclopedia of Research Design, Volume 2. Thousand Oaks, CA: SAGE Publications, Inc. p. 561. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781412961271.
- ↑ Roeckelein, Jon E. (1998). Dictionary of Theories, Laws, and Concepts in Psychology. Westport, CT: Greenwood Publishing Group. pp. 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0313304602.
- ↑ Cox, Erika (2000). Psychology for AS Level. Oxford: Oxford University Press. pp. 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0198328249.