ஆஸ்கர் மின்கோவஸ்கி

ஆஸ்கர் மின்கோவஸ்கி (Oskar Minkowski - ஜனவரி 13, 1858 - ஜூலை 18, 1931) ஜெர்மன் நோயியலாளரும் (Pathologist), வானவியலாளரும் ஆவார். உலகின் முதல் கல்லீரல் அறுவை சிகிச்சையாளர். மின்கோவஸ்கியின் இளைய சகோதரர், உலகப் புகழ் பெற்ற கணிதவியலாளர் ஹெர்மன் மின்கோவஸ்கி ஆவார். ஹெர்மன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஆசிரியரும் ஆவார்.

ஆஸ்கர் மின்கோவஸ்கி
பிறப்புJanuary 13, 1858
Kaunas, Lithuania
இறப்புJuly 18, 1931
Mecklenburg-Strelitz, Germany
பணியிடங்கள்University of Breslau
அறியப்படுவதுpancreas and diabetes
தாக்கம் 
செலுத்தியோர்
Josef von Mering

இளமை தொகு

ஆஸ்கர் மின்கோவஸ்கி 1831ம் ஆண்டு, ஜனவரி 13ம் நாள், கௌனாவுக்கு அருகிலுள்ள அலெக்சன் (Alexoten, near Kaunas, now in Lithuania) என்று அழைக்கப்படும், இன்றைய லிதுவேனியாவில் பிறந்தார். லிதுவேனிய யூதக் குடும்பத்தில் பிறந்து பின் கிறித்தவ மதத்தைத் தழுவினார்.[1] ஆஸ்கர் மருத்துவப் படிப்பை 1888ல் முடித்தார். மேரி ஜோஹன்னா சேகல் என்பவரை 1894ல் மணமுடித்தார். 1904 வரை ஸ்ட்ராபௌர்க்கில் மருத்துவராகப் பணிபுரிந்தார். பின்னர் கிரிச்வேல்த்-ல் மருத்துவப் படிப்பின் அவைத்தலைவராக இருந்தார். பின் பிரெஸ்லுவில் பேராசிரியராகப் பணியாற்றினார். உலகின் வெற்றிகரமான முதல் கல்லீரல் அறுவை சிகிச்சையைச் (hepatectomy) செய்தவரும் இவரே.

மண்ணீரல் குறித்த ஆய்வு தொகு

சர்க்கரை நோயின் காரணி போதுமான மண்ணீரல் சுரப்பு இன்மையே என்று ஆஸ்கர் நிரூபித்தார். (சர்க்கரைநோயின் கட்டுப்பாட்டாளர்/மேலாளர் இன்சுலின் என்ற ஹார்மோன் என்ற உண்மையை பிரடரிக் பாண்டிங் (Dr.Frederick Banting) பின்னரே கண்டறிந்தார்). பிறகு ஆஸ்கரும், ஜோசப் வான் மேரிங்கும் இணைந்து மண்ணீரல் தான் சர்க்கரை கட்டுப்பாட்டை நடத்தும் தொழிற்சாலை என்று அறிந்தனர்.

விருது தொகு

ஆஸ்கர் மின்கோவஸ்கியின் சேவையைப் பாராட்டும் வகையில், இத்துறையில் அரிய ஆய்வு செய்யும் இளம் ஆய்வாளருக்கு ஆண்டுதோறும் "மின்கோவஸ்கி விருது" என்ற விருதினை சர்க்கரை நோய்க்கான ஐரோப்பியக் கழகம் வழங்கி வருகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.springerlink.com/content/r127418l04640244/[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Minkowski Prize". Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2012-03-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்கர்_மின்கோவஸ்கி&oldid=3543277" இலிருந்து மீள்விக்கப்பட்டது