ஆஸ்கர் ஷிண்ட்லர்

செருமனிய தொழிலதிபர்


ஆஸ்கர் ஷிண்ட்லர் (Oskar Schindler 28 ஏப்ரல் 1908 - 9 அக்டோபர் 1974) என்பவர் ஒரு ஜெர்மனியர். இவர் தொழிலதிபர், உளவாளி, நாசிக்கட்சி உறுப்பினர் என அறியப்படுகிறார். இவர் இனப்படுகொலையில் இருந்து 1200 யூதர்களை காப்பாற்றியதற்காக நினைவுக் கூறப்படுகிறார்.

ஆஸ்கர் ஷிண்ட்லர்
பிறப்பு28 ஏப்ரல் 1908
ஸ்விட்டாவ், மொராவியா, ஆஸ்திரியா-ஹங்கேரி (தற்போது ஸ்விட்டாவி, செக் குடியரசு )
இறப்பு9 அக்டோபர் 1974(1974-10-09) (அகவை 66)
ஹில்டிஷிம், மேற்கு ஜெர்மனி
கல்லறைமவுண்ட் சியோம் Catholic Cemetery
ஜெருசலம், இஸ்ரேல்
31°46′13″N 35°13′50″E / 31.770164°N 35.230423°E / 31.770164; 35.230423
பணிதொழிலதிபர்
அரசியல் கட்சி
சமயம்ரோமன் கத்தோலிக்கர்
பெற்றோர்
  • ஹன்ஸ் ஷிண்ட்லர்*

பிராஸ்ஷிஸ்கா லூசர்

வாழ்க்கைத்
துணை
எமிலி ஷிண்ட்லர் (தி. பிழை: செல்லாத நேரம்)
வலைத்தளம்
www.oskarschindler.com

ஜெர்மனியில் இட்லரின் நாசிக் கட்சி ஆட்சிக்கு வந்ததும், இவர் தன் வணிக ஆதாய நோக்கத்துக்காக அக்கட்சியில் சேர்ந்தார். போலந்து மீது இட்லர் 1939-ல் படையெடுத்து அதைக் கைப்பற்றினார். பிறகு ஷிண்ட்லரும் அங்கு போய் ஒரு சமையல் பாத்திரத் தொழிற்சாலையை விலைக்கு வாங்கி இராணுவத்துக்கு சமையல் பாத்திரம் தயாரிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றார். அந்தத் தொழிற்சாலையில் குறைந்த சம்பளத்தில் யூதர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டார். அங்கு நாஜிக்கலால் யூதர்கள் இனப்படுகொலை கொலை செய்யப்படுவதையும் கண்டு மனம் வருந்தி தன்னிடம் வேலை செய்யும் யூதர்களையாவது காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்தார்.

தனது பாத்திரத் தொழிற்சாலையை இராணுவத் தளவாட தொழிற்சாலையாக மாற்றிவிட்டதாக பொய்யாக அதிகாரிகளிடம் கூறி தன் தொழிற்சாலையை செக்கோஸ்லேவியாவுக்கு மாற்றவும் தனக்குத் தேவையான தொழிலாளிகளைத் தெரிவுசெய்து அழைத்துச் செல்லவும் இலஞ்சம் தந்து அனுமதி பெற்றார். பின் யூதத் தொழிலாளர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றைத் தயாரித்தார். 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' என வரலாற்றில் இடம்பெற்றுள்ள அந்த பட்டியலில் சுமார் 1,200 பேர் இருந்தனர். உயிரைப் பணயம் வைத்து அவர்களை செக்கோஸ்லேவியாவுக்கு அழைத்துச் சென்று அவர்கள் அனைவர் உயிரையும் காப்பாற்றினார்.

இவர் செய்த உதவியை மறக்காமல் இவருக்கு யூதர்கள் இறுதி வரை நன்றியுடன் இருந்து உதவினர். 1968இல் இவருக்கு இஸ்ரேலில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்கர் ஷிண்ட்லர் மறைந்தபின் அவரது விருப்பப்படி அவரது உடல் இஸ்ரேலில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இவரது வாழ்க்கை நிகழ்வுகளைத் தழுவி ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' என்ற திரைப்படத்தை எடுத்தார். இத்திரைப்படம் இத்திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்று புகழ்பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்கர்_ஷிண்ட்லர்&oldid=1852587" இலிருந்து மீள்விக்கப்பட்டது