ஆஸ்டியோபோரோசிஸ்

ஆஸ்டியோபோரோசிஸ்

தொகு

ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு குறைவு நோய் சாதாரணமாக 40 வயதுக்கு மேல் ஏற்படும் நோயாகும். தற்போது இளம் வயதினரையும் பெரும்வாரியாக பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பலமணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதுஇ போதிய அளவு உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் இளம் வயதினரையும் தாக்கி வருகிறது. கால்சியம் சத்து அதிகம் உள்ள பால், கீரைகள் சாப்பிடாமல் இருப்பதும் இந்ந நோய் தாக்குவதற்கு காரணம். சத்தான உணவுகளை சாப்பிட்டால் இந்நோய் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்று கூறும் மருத்துவ நிபுணர்கள் அதற்கான உணவை பரிந்துரைக்கின்றனர்.

பால் மற்றும் பால் பொருட்கள் :

தொகு

குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்களை சாப்பிட வேண்டும். சீஸ்இ தயிர்இ பன்னீர்இ ஸ்கிம்டு மில்கி பவுடர் போன்றவற்றில் கால்சியம் அதிக அளவில் காணப்படுகிறது. இவற்றை சாப்பிட்டால் எலும்புகள் பலமடையும்.

கொட்டைகள் :

தொகு

பாதாம், பிஸ்தா போன்றவற்றில் தாது உப்புகள்இ கால்சியம்இ மக்னீசியம்இ பாஸ்பரஸ் உள்ளதால் எலும்பு திறன் குறைவு நோயில் இருந்து தப்பிக்கலாம்.

கேழ்வரகு :

தொகு

எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கும்.

வைட்டமின் சி

தொகு

வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சுஇ கொய்யாஇ ஸ்ட்ராபெர்ரீஸ்இ வாழைப்பழம்இ ஆப்பிள் போன்றவை எலும்புகளை வலுவடையச் செய்யும்.

பேரிச்சை

தொகு

இதில் உள்ள கால்சியம், மாங்கனீசு எலும்புகளுக்கு வலுவூட்டும்.

பருப்பு வகைகள்

தொகு

துவரம் பருப்பு,உளுந்து,கொண்டக்கடலை, பச்பைப் பயறு பேன்றவை அன்றாடம் சேர்க்கவேண்டும்

கீரைகள்

தொகு

முருங்கை கீரை,பொன்னாங்கன்னி, கறிவேப்பிலை, வல்லாரை, கொத்தமல்லி போன்றவற்றில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது.

காய்கறிகள்

தொகு

பச்சை காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும். மேற்கொண்;ட உணவுகளை எலும்பு திறன் குறைவு பிரச்சனைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்டியோபோரோசிஸ்&oldid=4131881" இலிருந்து மீள்விக்கப்பட்டது