இகோர் பெல்கோவிச்
இகோர் விளாதிமிரோவிச் பெல்கோவிச் (Igor Vladimirovich Bel'kovich) (Игорь Владимирович Белькович) (அக்தோபர் 15, 1904 ([[ஜூலிய கால அட்டவணை: அக்தோபர் 2) – மே 30, 1949) ஓர் உருசிய வானியலாளர் ஆவார். இவர் நிலா உருவளவு ஆய்வில் வல்லுனர் ஆவார்.
வாழ்க்கை
தொகுஇவர் ஓர் நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தார். இவர் தன் இளமைக் காலத்தை நதேழ்தினோவிலும் இலைழ்செவீவிலும் கழித்தார். இவர் 1922 இல் கழான் வணிக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் கழான் மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் கணிதவியல் புலத்தில் ஆசிரியராக சேர்ந்தார். இவர் 1927 இல் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றதும் அங்கே சிறப்பு வானியலாளர் ஆனார்.
இவர் 1928 இல் கழான் பல்கலைக்கழகத்தின் வி. பி. எங்கலார்த் வான்காணகத்தில் கணிப்பாளர் பதவியில் சேர்ந்தார்.
இவர் 1931 முதல் 1948 வரை நிலாவின் கதிரளவையியல் நோக்கீடுகளை மேற்கொண்டார். இவர் நிலா விளிம்பில் உள்ள புள்ளிகளில் அமைந்த மெசுட்டிங் ஏ குழிப்பள்ளத்தின் 247 தொடர் அளவீடுகளை எடுத்தார்.
இவர் யாகோவ்கின் உடன் இணைந்து சூரிய அளவு சார்ந்த நோக்கீடுகளைக் குறைக்கும் முறையை வளப்படுத்தினார். குறிப்பாக பெல்கோவிச் இருமைத் தீர்வுள்ள அளபுருபன் E மதிப்பைக் கண்டறியும் புதிய அடிப்படை முறையை முன்மொழிந்தார். இந்த அள்புருபனின் மதிப்பு 0.62 ஆகவும் 0.71 ஆகவும் அமைந்தது. இவை பின்னர் பொதுக் கருத்தேற்பைப் பெற்றன.
இவர்1949 இல் ஒரு தொகுப்பு ஆடியுடனும் ம்ந்ந்லும் ஒரு கூடுதல் ஆடியுடனும் சிறப்புவகை கிடைநிலை வான்வரைவி ஒன்றை வடிவமைத்தார். தொலைநோக்கியின் வில்லை 20 செமீ விட்டமும் 8 மீ குவியத் தொலவும் உள்ள ஓர் இரட்டை aplanate ஆல் ஆனதாகும். என்றாலும் இவர் இறந்துவிட்டதால், அந்தக் கருவி இயங்கும் நிலைக்குக் கொண்டுவரப் படவில்லை. பின்னர் இது 1958 இல் காபிபுல்லினால் நிறைவாக்கப்பட்டது.
இவர் நிலாவின் உருவத்தையும் ஆய்வு செய்துள்ளார். இதற்கு இவர் ஆர மதிப்பைக் காண, தனித்தனியாக நிலா வட்டின் கிழக்கு, மேற்கு விளிம்புகளின் அளவுகளைச் சூரிய அளவை நோக்கீடுகள் வழியே கண்டறிந்தார். இவர்கிழக்கு விளிம்பின் ஆரம் மேற்கு விளிம்பை விட 0.14 மடங்கு பெரியதாக உள்ளதை அறிந்தார். மேலும், கிழக்கு, மேற்கு விளிம்புகளின் ஆரங்கள் அகலாங்கின் ஒளியியல் தலையாட்ட்த்தைச் சார்ந்திருத்தலையும் கண்டறிந்தார் அதாவது நிலா விளிம்பு வெவ்வேறு ஒளியியல் தலையாட்டங்களில் வெவ்வேறான வடிவங்களில் அமைதலைக் கண்டறிந்தார்.
இவரது மகனான ஒலேகு இகோரேவிச் பெல்கொவிச் கூட ஒரு வானியலாளர் ஆவார்.
நிலாவின் ஒரு ஒரு குழிப்பள்ளம் பெல்கோவிச் குழிப்பள்ளம் என பெயரிடப்பட்டுள்ளது.
பணிகள்
தொகு• I. Belkovich. On the issue of limb effect in observations of the Moon // News of the United Arab Emirates. - 1936. - № 10 .
• Belkovich IV. On the question of the values of the moments of inertia of the Moon // Astronomical Circular. - 1948. - № 81 .
• Belkovich I.V. Physical libration of the Moon // News of the United Arab Emirates. - 1949. - № 24 .
இலக்கியம்
தொகுRizvanov NG, Nefed'ev Yu.A., Kutlenkov MV. Researches on selenodesy and the dynamics of the moon in Kazan // Georesources. - Kazan: Georesources, 2008. - № 3 . - p . 30-34 . - ISSN 1608-5043 .
மேற்கோள்கள்
தொகு• Belkovich O.I. Planet of my father . 1001.ru (May 13, 2005). Retrieved January 22, 2011. Archived May 12, 2012.
வெளி இணைப்புகள்
தொகு- (உருசிய மொழியில்) Biography by his son