இக் நோபல் பரிசு

இக் நோபல் பரிசு(Ig Nobel Prizes) என்பது நோபல் பரிசுகளைப் போலவே வழங்கப்படும் ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத் தொடக்கத்தில் பத்து நபர்களுக்கு இப்பரிசு வழங்கப்படும். முதலில் மக்களைச் சிரிக்க வைத்துப் பிறகு சிந்திக்க வைப்போரைத் தெரிவு செய்வது இப்பரிசின் கொள்கை. பரிசளிப்பு விழா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.[1] பரிசளிப்போரில் உண்மையான நோபல் பரிசு பெற்றோரும் அடங்கியிருப்பர்.

உயிருள்ள தவளையை காந்தப்புலங் கொண்டு அந்தரத்தில் உயர்த்திய சோதனைக்காக ஆண்ட்றீ ஜிம் இக்நோபல் பரிசு பெற்றார்.

1991 ஆம் ஆண்டு முதல் இப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆன்ட்றீ ஜிம் நோபல் பரிசு மற்றும் இக் நோபல் பரிசு இரண்டையும் பெற்றவர் ஆவார்.[2][3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்_நோபல்_பரிசு&oldid=1792817" இருந்து மீள்விக்கப்பட்டது