இங்கா குர்ட்சிலாவா

சியார்சிய சதுரங்க வீராங்கனை

இங்கா குர்ட்சிலாவா (Inga Khurtsilava) என்பவர் சியார்சியா நாட்டைச் சேர்ந்த பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் நாள் பிறந்தார். 1991, 1997, 2000 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சியார்சியா நாட்டின் பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் வென்றிருக்கிறார்.

இங்கா குர்ட்சிலாவா
Inga Khurtsilava
நாடுசியார்சியா
பிறப்பு17 ஏப்ரல் 1975 (1975-04-17) (அகவை 48)
பட்டம்பெண் கிராண்டு மாசுட்டர் (2013)

வாழ்க்கை தொகு

மூன்று முறை சியார்சிய பெண்கள் சாம்பியன் என்ற பட்டம் பெற்ற இவர் 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற மகளிர் உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டார். ஒற்றை வெளியேற்றப் போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் சுற்றில் நோனா கேப்ரிந்தாசுவிலியை தோற்கடித்த இங்கா குர்ட்சிலாவா இரண்டாவது சுற்றில் விக்டோரியா சிமிலைட்டு நீல்சன் என்ற லித்துவேனிய வீராங்கனையால் தோற்கடிக்கப்பட்டார் .[1].. 2013 ஆம் ஆண்டு பிடே அமைப்பு இங்கா குர்ட்சிலாவாவிற்கு பெண்கள் கிராண்டு மாசுட்டர் பட்ட்த்தை வழங்கியது [2].

மேற்கோள்கள் தொகு

  1. "2000 FIDE Knockout Matches : World Chess Championship (women)". www.mark-weeks.com.
  2. "FIDE Title Applications (GM, IM, WGM, WIM, IA, FA, IO)". ratings.fide.com.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இங்கா_குர்ட்சிலாவா&oldid=2719037" இலிருந்து மீள்விக்கப்பட்டது