இசக்கி சுப்பையா

இந்திய அரசியல்வாதி

இ. சுப்பையா (E. Subaya) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தினைச் சார்ந்தவர். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரானார். இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

முதலமைச்சர் ஜெயலலிதாவால் சட்ட, நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அமைச்சராக 2011ஆம் ஆண்டு சூன் மாதத்தில் நியமிக்கப்பட்டார். பின்னர் இதே ஆண்ட்டின் நவம்பர் மாதத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசக்கி_சுப்பையா&oldid=3463264" இருந்து மீள்விக்கப்பட்டது