இசாங்கோ எலும்பு

பாராகோர்ட் எனும் பெல்சியம் நாட்டைச்சேர்ந்த நிலவியலாளர், 1960 ஆம் ஆண்டில் காங்கோ நாட்டின் இசாங்கோ பகுதியில் செம்லிக்கி ஆற்றங்கரையில், பபூன் குரங்கின் காலெலும்பினை கண்டெடுத்தார். 20000-18000 பொமுவைச்சேர்ந்த இந்த எலும்பின் மீது, இரண்டின் வாய்ப்பாடு, பகா எண்களின் சிறு தொகுப்பு, பத்தின் வாய்ப்பாடு ஆகியவை அக்கால மாந்தர்களால் கோடுகளைக்கொண்டு குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் இது கணக்கில் முன்னேறிய மாந்தர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என கருதப்படுகிறது. இந்த எலும்பானது பெல்சியம் நாட்டின் புரூசெல்சு நகரில் உள்ள அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. Huylebrouck, Dirk (2019), "Missing Link", Africa and Mathematics, Mathematics, Culture, and the Arts, Cham: Springer International Publishing, pp. 153–166, doi:10.1007/978-3-030-04037-6_9, ISBN 978-3-030-04036-9, S2CID 239306457, பார்க்கப்பட்ட நாள் 2021-10-19
  2. Association pour la diffusion de l'information archéologique/Royal Belgian Institute of Natural Sciences, Brussels (n.d.). "Have You Heard of Ishango?" (PDF). Natural Sciences.
  3. Pletser, Vladimir (2012). "Does the Ishango Bone Indicate Knowledge of the Base 12? An Interpretation of a Prehistoric Discovery, the First Mathematical Tool of Humankind". arXiv:1204.1019 [math.HO].
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசாங்கோ_எலும்பு&oldid=3768849" இலிருந்து மீள்விக்கப்பட்டது