இசுடெல்லா செஸ்

இசுடெல்லா செஸ் (Dr. Stella Chess 1 மார்ச்சு 1914–14 மார்ச்சு 2007) என்பவர் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் மனநோய் மருத்துவ அறிஞர் ஆவார். நியூயார்க்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்தார். இவருடைய கணவர் அலெக்சாந்தர் தாமசுடன் இணைந்து குழந்தைகளின் மன இயல்புகள் குறித்து ஆராய்ச்சி செய்தார்.[1]

பிறப்பும் படிப்பும்தொகு

நியூயார்க்கு நகரில் ரசியப் பெற்றோர்களுக்குப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு வழக்கறிஞர்; தாயார் ஒரு ஆசிரியர். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புக்குப் பிறகு 1935 இல் நியூயார்க்குப் பல்கலைக்கழக்த்தில் சேர்ந்தார். 1939இல் மருத்துவ முதுவர் பட்டம் பெற்றார். மாணவராக இருக்கும்போதே குழந்தைகளின் மனவியல் ஆய்வில் ஈடுபட்டார்.

ஆசிரியர் பணிதொகு

நியூயார்க்கு மருத்துவக் கல்லுரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். குழந்தைகள் மனநோயியல் பெண் பேராசிரியர் என்னும் தகுதியை முதன் முதலில் பெற்றவர் இவர். 1966 இல் நியுயார்க்குப் பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் மனவியல் இணைப் பேராசிரியர் ஆனார். 1970 இல் முழுமையான பேராசிரியர் என்ற பதவியைப் பெற்றார்.

ஆய்வுகள்தொகு

குழந்தைகளின் குணங்கள் பிறப்புக்கு முன்னேயே உருவாகி அமைகின்றனவா என்றும், பெற்றோர்களின் வளர்ப்பின் அடிப்படையில் உண்டாகின்றனவா என்றும் ஆய்ந்தார். பிறவிக் கோளாறுகளான ருபெல்லா, ஆட்டிசம் போன்ற இளம் மகவுகளின் நோய்களைப் பற்றியும் ஆய்வுகள் செய்து நூல் எழுதினார்.[2] குழந்தைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். பிள்ளைகளை வளர்ப்பின் படிநிலைகளை எளிது, கடினம், கொஞ்சம் கடினம் என்று வகைப்படுத்திக் கண்டறிந்தார்.

இசுடெல்லா செஸ் புதிதாகப் பிறந்த பலவேறு பின்புலங்களைக் கொண்ட 238 குழந்தைகளை ஆய்வுக்கு எடுத்து, அக்குழந்தைகளின் பெற்றோர்களின் குணநலன்களும் நடத்தைகளும் அக்குழந்தைகளின் வளர்ச்சியை எந்த அளவு பாதிக்கச் செய்கின்றன என்பதை ஆராய்ந்தார். யுவர் சைல்ட் ஈஸ் எ பெர்சன் என்ற ஆங்கில நூலை மற்ற இரண்டு பேருடன் இணைந்து எழுதினார்.[3]

இசுடெல்லா செஸ் தமது 93 ஆம் அகவையில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு, காலமானார்.

மேற்கோள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடெல்லா_செஸ்&oldid=2707914" இருந்து மீள்விக்கப்பட்டது