இசுட்ரோன்சியோபுளோரைட்டு

ஆலைடு கனிமம்

இசுட்ரோன்சியோபுளோரைட்டு (Strontiofluorite) என்பது SrF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இதுவோர் அரிய ஆலைடு வகைக் கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது. இக்கனிமத்தில் காரமண் உலோகமான இசுட்ரோன்சியமும் ஆலசன் புளோரினும் ஒருவகையான இசுட்ரோன்சியம் புளோரைடாகக் காணப்படுகின்றன. இசுட்ரோன்சியத்தின் புளோரைட்டு வரிசையொத்த சேர்மமாகவும் இதைக் கருதமுடியும்.

இசுட்ரோன்சியோபுளோரைட்டு
Strontiofluorite
பொதுவானாவை
வகைஆலைடு கனிமம்
வேதி வாய்பாடுSrF2
இனங்காணல்
நிறம்வெளிர் சாம்பல்
மோவின் அளவுகோல் வலிமை4
மிளிர்வுஉயவுத்தன்மை
மேற்கோள்கள்[1]

வெளிர் சாம்பல் நிறத்தில் ஒளிகசியும் படிகமாக இசுட்ரோன்சியோபுளோரைட்டு காணப்படுகிறது மேலும் இது எண்முக கனசதுரப் படிகங்களாக 0.5 மில்லிமீட்டர் வரையிலானஅளவுகளுடன் கிடைக்கிறது.

ஆசுட்ரோபைலைட்டு, பர்பேங்கைட்டு, குளோரோபார்டோனைட்டு, புளோரபட்டைட்டு, புளோரைட்டு, லேம்புரோபைலைட்டு, போலெழாயிவையிட்டு-(Ce), வில்லியவுமைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து இசுட்ரோன்சியோபுளோரைட்டு காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Strontiofluorite: Strontiofluorite mineral information and data". mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2017-03-10.