முஸ்லிம்
(இசுலாமியர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இசுலாமியர் என்பவர்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை முஸ்லிம் என்றும் பெண்களை முஸ்லிமா என்றும் அழைப்பதுண்டு. முஸ்லிம் என்ற சொல் அரபு மொழியில் இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன் என்றும், இறைவனிடம் சரணடைந்தவன் என்றும் பொருள் தரும். 'முஸ்லிம்' என்ற பெயரைக் கொண்ட பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்[1].
இஸ்லாமியர்களின் நம்பிக்கை (விசுவாசம்) கொள்கை
- அல்லா என்னும் ஏக இறைவனை நம்புதல்.
- அல்லாவால் படைக்கப்பட்ட மலக்குகளை வானவர்களை நம்புதல்.
- அல்லாவால் அருளப்பட்ட நான்கு மறைகளையும் நம்புதல்.
- இந்த உலகத்திலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் வழிகாட்டிகளாக வந்த 124,000 நபிமார்களை (இறைத்தூதர்கள்) நம்புதல்.
- உலக முடிவுக்குப் பின்னர் நடைபெறவிருக்கும் தீர்ப்புநாளை (Judgement Day) நம்புதல்.
- இந்த பிரபஞ்சத்தில் இடம்பெறும் நன்மையான, தீமையான செயல்கள் அனைத்தும் ஏக இறைவனில் நின்றும் உள்ளவையென நம்புதல்.
இசுலாமியர்களின் கடமைகள்
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-05-07. பார்க்கப்பட்ட நாள் 2009-05-09.