இசுலாமிய நாட்டுப்புறக்கதைப் பாடல்கள்

இசுலாமிய நாட்டுப்புறக்கதைப் பாடல் நான்கு வகைப்படும்.அவை,படைப்-போர்,கிஸ்ஸா, மஸ்- அலா, நாமா.

படைப் போர் இலக்கியம் தொகு

இது இசுலாமிய நெறியுடன் தொடர்புடைய போர்ச் செய்திகளைப் பற்றிக் கூறும் இலக்கியம். இதனுள் காப்பு,வாழ்த்து,தூது, சொற்போர், ஒப்பாரி ஆகிய உறுப்புகள் அமையப்பெற்றுள்ளன.

நூல்கள் தொகு

  • ஐந்து படைப்போர்- அசனிப்புலவர்
  • செய்தத்துப் படைப்போர்- குனுசு முசுப்புலவர்
  • ஹீசைன் படைப்போர்- குனுசு முசுப்புலவர்
  • சையித்துப் படைப்போர்
  • இவுசுல்கூல் படைப்போர்

கிஸ்ஸா இலக்கியங்கள் தொகு

கிஸ்ஸா எனும் சொல்லுக்குச்,சொல்லுதல் என்று பொருள்.இது கஸஸ் எனும் அரபுச் சொல்லில் இருந்து வந்தது.கதைக் கூறும் போக்கினை உடைய நூல்வகை இது.

நூல்கள் தொகு

  • யூசுபு நபி கிஸ்ஸா- மாதறு சாகிபு
  • செய்தூன் கிஸ்ஸா- அப்துல் காதர் சாகிபு
  • பீவி மரிமுடைய கிஸ்ஸா

மஸ்- அலா இலக்கியம் தொகு

விடுகதை அமைப்பினை உடைய நூல்வகை இலக்கியம் இது.இஸ்லாம் தொடர்பான கேள்விகளையும், விடைகளையும் கொண்ட இலக்கிய வகையே இது.

நூல்கள் தொகு

  • ஆயிரமஸ் அலா- வண்ணப்பரிமளப் புலவர்
  • வெள்ளாட்டி மஸ்அலா- அப்துல்காதிறு லெப்பை
  • நூறு மஸ்அலா.

நாமா இலக்கியம் தொகு

இது பாரசீகச் செல்வாக்கால் தமிழில் வந்த புத்திலக்கியம்.நாமே என்ற பாரசீகச் சொல் நாமா என மருவி வழங்குகிறது.கதை,வரலாறு,நூல்,எனப் பல பொருள்களை இச்சொல் குறிக்கிறது.

நூல்கள் தொகு

  • மிகுறாசு நாமா- நபியைப் பற்றியது.
  • அலி நாமா- நபியின் மருமகன் பற்றியது
  • மிர்ராஜீ நாமா- மதாறு சாகிபு புலவர்
  • நூறு நாமா- செய்யது அகமது.

உசாத்துணை தொகு

1) மு.சாயபு மரைக்காயர்," இஸ்ஸாம் வளர்த்த தமிழ்" இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் வெளியீடு -1998

2) முனைவர் பாக்கியமேரி," வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு "- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2008.